Tomato Rice : சுவையான தக்காளி சாதம் எப்படி செய்வது.. ஒருமுறை இந்த மாறி சமைத்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!
Tomato Rice : சுவையான தக்காளி சாதம் எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்:
எண்ணெய் 2 டீஸ்பூன்
நெய் 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை சிறிய துண்டு
ஏலக்காய் 1
கிராம்பு 2
கல்பாசி
பெருஞ்சீரகம் விதைகள் 1/4 தேக்கரண்டி
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
உப்பு 1 டீஸ்பூன்
புதினா இலைகள்
பாஸ்மதி அரிசி 1 கப் (தண்ணீர் 2 & 1/4 கப்)
செய்முறை
தக்காளி சாதம் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு விருப்ப உணவாகும். இந்த தக்காளி சாதம் வெவ்வேறு வகையில் செய்யலாம். ஆனால் தற்போது நாம் இதில் பார்க்கும் வகையில் செய்தால் தக்காளி சாதம் இன்னும் சுவை கூட்டும். அதேபோல இந்த தக்காளி சாதம் செய்வது மிகவும் ஈஸியான வேலை. சுவையான தக்காளி சாதம் எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
ஒரு கப் பாஸ்மதி அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள் அதை நன்றாக கழுவி நான்கு கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும். இப்போது ஒரு குக்கர் எடுத்துக் கொள்ளுங்கள் அதை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஒரு ஸ்பூன் ஆயில், பட்டை லவங்கம் ஏலக்காய் நட்சத்திர நாசி, சிறிது சோம்பு சேர்த்து வதக்கி பின்னர் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
இப்போது ஊற வைத்த தண்ணீரோடு சேர்த்து அரிசியை இதில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் குக்கர் மூடியை போட்டு மூடி வைக்கவும். ஒரு விசில் வந்ததும் சிம்மில் ஐந்து நிமிடம் வைத்து பின்னர் எடுத்து பரிமாறவும். இப்போது உங்களுக்கு சுவையான தக்காளி சாதம் ரெடி.
மிகவும் ஈஸியான ரெசிபி
இதனை பேச்சுலர்ஸ்ம் சமைக்கலாம். மிகவும் ஈஸியான இந்த ரெசிபியை ஒருமுறை நீங்கள் செய்து கொடுங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வித்தியாசமாகவும் இருக்கும்.
தக்காளி நன்மைகள்
தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும்.
இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடையை செய்திகள்