Boy Baby Names : இந்தப்பெயர்களைச் சூட்டி, உங்கள் செல்ல இளவரசன்களுக்கு சிறப்பான அடையாளத்தை கொடுங்கள்!-boy baby names give your baby princes a special identity by naming them - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : இந்தப்பெயர்களைச் சூட்டி, உங்கள் செல்ல இளவரசன்களுக்கு சிறப்பான அடையாளத்தை கொடுங்கள்!

Boy Baby Names : இந்தப்பெயர்களைச் சூட்டி, உங்கள் செல்ல இளவரசன்களுக்கு சிறப்பான அடையாளத்தை கொடுங்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 26, 2024 03:04 PM IST

Boy Baby Names : இந்தப்பெயர்களைச் சூட்டி, உங்கள் செல்ல இளவரசன்களுக்கு சிறப்பான அடையாளத்தை கொடுங்கள். அது அவர்களின் வாழ்வை வளமாக்கும்.

Boy Baby Names : இந்தப்பெயர்களைச் சூட்டி, உங்கள் செல்ல இளவரசன்களுக்கு சிறப்பான அடையாளத்தை கொடுங்கள்!
Boy Baby Names : இந்தப்பெயர்களைச் சூட்டி, உங்கள் செல்ல இளவரசன்களுக்கு சிறப்பான அடையாளத்தை கொடுங்கள்!

இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

ஆருஷ்

ஆருஷ் என்றால் சூரியனின் முதல் கதிர் என்று பொருள். இதமானவர், அமைதியானவர், சிவப்பு, புத்திசாலியானவர், சூரியனின் மற்றொரு பெயர் ஆருஷ். இந்தப் பெயரை வைத்தால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சூரியகதிர்களைப்போல் பிரகாசமானதாக இருக்கும்.

ராஜேஷ்

அரசனுக்கெல்லாம் அரசன் என்ற பொருளைத்தரும் பெயர். இது சமஸ்கிருத வார்த்தை ராஜா என்பதில் இருந்து தோன்றிய பெயர் ஆகும். இந்தப்பெயர் இந்துக்கடவுள் விஷ்ணுவுடன் தொடர்புகொண்டது. அவரே இந்த உலகை ஆளும் தலைசிறந்த ஆளுமையாகக் கருதப்படுகிறது.

உதய்

உதய் என்றால் சூர்யோதயம் என்று பொருள். உங்கள் மகன் உங்கள் வாழ்வின் உதயம் என்று பொருள். அரபி மொழிப்பெயர். உதயம் என்றால் எழுச்சி, ஓட்டம், மேலெழுதல் என்று எண்ணற்ற பொருள்களை தருகிறது. இந்தப்பெயரை வைத்தால் உங்கள் குழந்தைகள் இலக்குடன் முன்னேறிச் செல்வார்கள்.

சர்வேஷ்

சர்வேஷ், அனைத்திற்குமான கடவுள், சர்வம் என்றால் அனைத்தும் என்று பொருள். ஈஷ் என்றால் ஈஸ்வரன் அல்லது கடவுள் என்பதை குறிக்கும். அனைத்துக்குமான கடவுள் என்ற பொருளைத்தருவது சர்வேஷ். உச்சமானவர் அல்லது உலகம் மொத்தத்தையும் ஆள்பவர் என்று பொருள். இது சிவனின் மற்றொரு பெயராகும்.

பார்த்

பார்த், என்றால் இளவரசன், அர்சுனன் என்ற பொருள்களை தரும் பெயர். இது சமஸ்கிருத பெயர் பார்த்தா என்பதில் இருந்து வருகிறது. பார்த்தா என்றால் இந்துக்கடவுள் கிருஷ்ணனை குறிக்கும். அவரது நண்பர் அர்சுணன் அவரை இவ்வாறு அழைப்பார்.

விமல்

விமல் என்றால் தூய்மை அல்லது சுத்தம் என்று பொருள். உங்கள் மகன் தூய உள்ளத்தையும், சுத்தமான எண்ணங்களையும் கொண்டிருக்கவேண்டுமென்றால், அவருக்கு பொருத்தமானது இந்தப்பெயர்.

அஸ்வின்

அஸ்வின் என்றால் ஒளி, பிரகாசம் என்று பொருள். உங்கள் வாழ்வில் ஒளியே உங்கள் மகன்தான் என்றால் அவருக்கு இந்தப்பெயரை சூட்டுங்கள். அவர்களின் எதிர்காலம் வளமானதாக இருக்கும்.

தருண்

தருண் என்றால் இளமை, இளமையான என்று பொருள். தருண் என்பது இளமையான தோற்றம் கொண்ட நபர் என்பதைக் குறிக்கும். உங்களின் குழந்தை என்றும் இளமைத்தோற்றத்துடன் இருக்கவேண்டும் என நீங்கள் விரும்பினால் அவருக்கு இந்தப் பெயரை சூட்டுங்கள்.

வினய்

வினய் என்றால் அடக்கமானவர், பணிவானவர் என்று பொருள். இந்தப்பெயரை வைக்கும் குழந்தைகள் மிகுந்த பணிவுள்ளவர்களாகவும், தாழ்மையுடனும் நடந்து கொள்பவராக இருப்பார்கள்.

சிவா

சிவா என்றால் இந்துக்கடவுள் சிவனின் பெயர். அதிர்ஷ்டம், மங்களகரமான, செல்வச்செழிப்புமிக்க என்று எண்ணற்ற அர்த்தங்களை இந்தப்பெயர் தரும். சிவன் எல்லையற்ற சக்திகளைக் கொண்ட கடவுள். அவர் இந்த உலகத்தையே மாற்றும் வல்லமை கொண்டவர்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.