தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  விரைவில் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு!

விரைவில் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு!

Aug 14, 2022, 04:08 PM IST

எலக்ட்ரான் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் (Electron Electric motors) நிறுவனம் புதிய Electron Pro Ev பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது.
எலக்ட்ரான் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் (Electron Electric motors) நிறுவனம் புதிய Electron Pro Ev பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது.

எலக்ட்ரான் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் (Electron Electric motors) நிறுவனம் புதிய Electron Pro Ev பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டன. பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஒரு காரணமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் தேவை குறித்து தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துவிட்டன. பிரபல மோட்டார் நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

Causes of Excessive Fiber : நார்ச்சத்துக்கள் உடலுக்கு நல்லதுதான்? ஆனால் அளவுக்கு மிஞ்சும்போது என்னவாகும்?

Masturbation : சுய இன்பம் : கர்ப்ப காலத்தில் செய்யலாமா? புராஸ்டேட் புற்றுநோயை குறைக்குமா? – விளக்கம் இதோ!

Beauty Tips : உங்கள் முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? கரும்புள்ளிகளை நீக்க இதை மட்டும் செய்ங்க போதும்!

Sexual Health: அந்தரங்க உறுப்புகளில் அலட்சியமா ஆண்களே.. அப்பறம் காம இன்பத்திற்கு வேட்டுத்தான்! ஆணின் வலிக்கு காரணம் இதோ

இந்நிலையில் புதுப்புது நிறுவனங்களும் தற்போது உருவாகி வருகின்றன அந்த வகையில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனமான எலக்ட்ரான் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் (Electron Electric motors) புதிய எலக்ட்ரான் ப்ரோ Ev (Electron Pro Ev) என்ற ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் pro, pro X, Pro Max என மூன்று வேரிண்டுகளில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. வெறும் 500 ரூபாய் கட்டி இந்த ஸ்கூட்டர்களை முன் பதிவு செய்து கொள்ளலாம். அதேசமயம் இந்த ஸ்கூட்டர்களின் விற்பனையானது முடிந்து விட்டதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்தவர்களுக்கு இன்னும் ஆறு மாதங்களில் ஸ்கூட்டர் விநியோகம் கொடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களின் சிறப்பம்சங்கள் குறித்து இதில் காணுமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

சிறப்பு அம்சங்கள்

  • இந்த ஸ்கூட்டரில் LED லைட் , விண்ட் ஸ்க்ரீன், சென்டர் ஸ்பைன், ஹைவே பிளோர் போர்டு, நீளமான சேடல் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • எல்லா வேரியண்ட்களிலும் மைல்டு டிரைவ் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. Pro X வேரியண்ட் 8.5 KW மோட்டார், Pro வேரியண்ட் 7 KW மோட்டார், Pro MAX வேரியண்ட் 9.6KW மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல் ProX வேரியண்ட் 2.7 KWH லித்தியம் அயன் பேட்டரி, Pro வேரியண்ட் 5.4 KWH பேட்டரி, Pro MAX வேரியண்ட் 5.4 KWH பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதில் ஆப்பிள் கார் பிலே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, Keyless இக்னிஷன் வசதி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஆடியோ கண்ட்ரோல், டயர் ப்ரெஷர் மானிட்டர் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • பாதுகாப்புக்காக CBS பிரேக்கிங் வசதி, டூயல் சேனல், ABS வசதி, டெலெஸ்கோபிக் போர்க், டூயல் ஷாக் , முன்பக்க மற்றும் பின்பக்க பெடல் டிஸ்க் பிரேக் வசதி போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இதன் எக்ஸ் ஷோரூம் விலையானது Pro வேரியண்ட் 1,19,980 லட்சம் ரூபாய், Pro X வேரியண்ட் 1,59,997 லட்சம் ரூபாய், Pro MAX வேரியண்ட் 1,79,990 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.