Causes of Excessive Fiber : நார்ச்சத்துக்கள் உடலுக்கு நல்லதுதான்? ஆனால் அளவுக்கு மிஞ்சும்போது என்னவாகும்?
May 07, 2024, 11:28 AM IST
Causes of Excessive Fibre : உங்கள் உடலுக்கு நார்ச்சத்துக்கள் தேவைதான். ஆனால் அவை அதிகமாகும்போது, உங்கள் உடலுக்கு என்னவாகும் என்று தெரியுமா?
உங்கள் உடலுக்கு நார்ச்சத்துக்கள் தேவைதான். ஆனால் நீங்கள் அதை கவனமான எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமானால், அவை ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்னவென்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
நார்ச்சத்துக்கள், ஒருவகை கார்போஹைட்ரேட்கள்தான். இதை உங்கள் உடலால் செரிக்க முடியாது. ஆனால் இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு தொடர்பான செரிமான மண்டல உபாதைகளுக்கு இந்த நார்ச்சத்துக்கள் உதவுகிறது.
எனவே அதுபோன்ற நேரங்களில் அறிகுறிகளை குறைக்க நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவீர்கள். இது உங்களுக்க உதவவும் செய்யும். ஆனால் இதை நீங்கள் இதை கவனமுடன் எடுத்தக்கொள்ளாவிட்டால் இதுவே சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
நார்ச்சத்துக்கள் என்றால் என்ன?
பெருநுண்ணுட்ட மாவுச்சத்துக்கள் மோனோசேச்சரைட், டைசேச்சரைட் மற்றும் பாலிசேச்சரைட் என வகைப்படுத்தப்படுகின்றன. நார்ச்சத்துக்கள் தாவரங்களில் இருந்து பெறப்படும் பாலிசேச்சரேடுகள் ஆகும்.
இவை கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், கரையாத நார்ச்சத்துக்கள் அதாவது சாலிபில் மற்றும் இன்சாலிபில் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இருவகை உள்ளன.
இதில் கரையாத நார்ச்சத்துக்கள், தண்ணீரில் கரையாது, மலத்தின் அடர்த்தியை அதிகரித்து, மலச்சிக்கலை தடுக்கிறது. இது காய்கறிகள் மற்றும் பழங்களில் தோல்களில் நிறைய உள்ளது.
கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தண்ணீரில் கரைந்து, நமது செரிமான மண்டலத்தி ஜெல் போல் உருவாகி கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது. பீன்ஸ், ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், ப்ரோகோலி, சிட்ரஸ் பழங்களில் இது உள்ளது.
சர்க்கரை அளவை உடலில் பராமரிக்கவும், கொழுப்பை குறைக்கவும், பித்தத்தை ஒன்றுசேர்க்கவும், வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தி உடல் எடையைக் குறைக்கவும், குடல் ஆரோக்கியத்துக்கும் ஒருவருக்கு நார்ச்சத்துக்கள் தேவை.
இவை அதிகமானால் ஏற்படுத்தும் பள்ளவிளைவுகள் என்ன?
அனீமியா
அனீமியா, ரத்தத்தில் உள்ள ஆரோக்கியமான சிவப்பணுக்கள் குறைந்து, ரத்தசோகையை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உடலில் சோர்வு ஏற்படும். அதிக நார்ச்சத்துக்கள் இரும்பு உறிஞ்சுவதில் தடையை ஏற்படுத்தி அனீமியாவுக்கு வழிவகுக்கும்.
ஆஸ்டியோபோரோசிஸ்
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை வலுவிழக்கவோ அல்லது உடையவோ செய்யக்கூடிய எலும்புப்புரை நோயாகும். நார்ச்சத்துக்கள் கால்சியத்தை ஒன்றாக்கி வெளியேற்றிவிடும், இதனால் உங்களுக்கு எலும்புப்புரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வயிறு உப்புசம்
நீங்கள் திடீரென, அதிகப்படியான நார்ச்சத்துக்கள் எடுத்துக்கொண்டால், அது உடலில் வாயுவை அதிகரித்து, வயிறு உப்பிக்கொள்ள வழிவகுக்கும். இது குடலில் உள்ள பாக்டீரியாக்கள், செரிக்காமல் உள்ள நார்ச்சத்துக்களை புளிக்கச் செய்வதால் ஏற்படுகிறது.
மினரல்கள் குறைபாடு
அதிகளவில் நார்ச்சத்துக்கள் எடுக்குபோது, அது உடலுக்கு தேவையான மினரல்களை உடல் உறிஞ்சுவதை தடுக்கும், இதனால் உடலுக்கு தேவையான இரும்பு, கால்சியம், சிங்க் கிடைக்காமல் செய்துவிடும். எனவே உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.
மூலம்
செரிக்க முடியாத நார்ச்சத்துக்களை எடுத்துக்கொண்டு போதியஅளவு தண்ணீரை பருகவில்லையென்றால், அது உங்கள் உடலில் மலத்தை இறுகச்செய்து, ஆசனவாயில் மூலத்தை ஏற்படுத்திவிடும்.
மலச்சிக்கல்
அதிக நார்ச்சத்துக்கள், குறைவான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது, மலம் கழிப்பதை கடினமாக்குகிறது. இதனால் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதனால் ஒருவர் வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிக்கும் நிலை ஏற்படும்.
வயிற்றுப்போக்கு
அதிக நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை மட்டும் ஏற்படுத்தாது, அது செரிமானகோளாறுகள், வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் ஏற்படுத்தும். உங்கள் உடலால நார்ச்சத்துக்களை கிரகித்துக்கொள்ள முடியவில்லையென்றால், உங்கள் வயிறு பாதிக்கப்படும்.
உங்களுக்கு இந்த தொந்தரவுகள் ஏற்பட்டால், அதிக தண்ணீர் எடுங்கள். படிப்படியாக நார்ச்சத்துக்கள் எடுப்பதை குறையுங்கள். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். எனவே அளவுக்கு மிஞ்சிய எதுவுமே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
டாபிக்ஸ்