தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beauty Tips : உங்கள் முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? கரும்புள்ளிகளை நீக்க இதை மட்டும் செய்ங்க போதும்!

Beauty Tips : உங்கள் முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? கரும்புள்ளிகளை நீக்க இதை மட்டும் செய்ங்க போதும்!

Priyadarshini R HT Tamil

May 07, 2024, 09:45 AM IST

Glowing Face : இதற்கு மரபணுக்கள் அல்லது சுற்றுச்சூழல் என பல்வேறு காரணங்கள் உண்டு. இவையனைத்தையும் குணமாக்கும் ஒரு கிரீமை வீட்டிலே தயாரிக்க முடியும்.
Glowing Face : இதற்கு மரபணுக்கள் அல்லது சுற்றுச்சூழல் என பல்வேறு காரணங்கள் உண்டு. இவையனைத்தையும் குணமாக்கும் ஒரு கிரீமை வீட்டிலே தயாரிக்க முடியும்.

Glowing Face : இதற்கு மரபணுக்கள் அல்லது சுற்றுச்சூழல் என பல்வேறு காரணங்கள் உண்டு. இவையனைத்தையும் குணமாக்கும் ஒரு கிரீமை வீட்டிலே தயாரிக்க முடியும்.

சிலருக்கு முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் முகப்பொலிவையே முற்றிலும் குலைக்கும். இதனால் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்து! வெறும் கஞ்சி மட்டும் போதும்!

Live without Disease : நோயின்றி நூறாண்டு காலம் வாழ வேண்டுமா? அதற்கு என்ன தேவை – ஆய்வுகள் கூறுவது இதைத்தான்!

Kidney Cancer : உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? கவனம்! சிறுநீரக புற்றுநோயாக இருக்கலாம்!

Sleeping Tips : தூக்கமின்மையால் அவதியா.. ஆழ்ந்த தூக்கத்திற்கு இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்

குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மெலோனின் குறைபாடு அல்லது ஹார்மோன் பிரச்னைகளால் முகத்தில் கருந்திட்டுகள் ஏற்பட்டு, முகப்பொலிவு குறையும்.

இதற்கு மரபணுக்கள் அல்லது சுற்றுச்சூழல் என பல்வேறு காரணங்கள் உண்டு. இவையனைத்தையும் குணமாக்கும் ஒரு கிரீமை வீட்டிலே தயாரிக்க முடியும்.

இந்த கிரீமை தினமும் இரவில் 15 நாட்கள் தடவினால் உங்கள் முகம் தங்கம்போல் ஜொலிக்கும். ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதைவிட இது சிறந்தது.

இதை ஃபிரிட்ஜில் வைத்துதான் பயன்படுத்தவேண்டும். தினமும் இரவில் உறங்கச்செல்லும் முன் ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து ஆறவைத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு உறங்கிவிடவேண்டும்.

காலையில் எழுந்து வழக்கம்போல் முகத்தை கழுவவேண்டும். இதை தொடர்ந்து செய்துவர பலன் கிட்டும்.

இதை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கிராம்பு – சிறிதளவு

உடலுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், ஆஸ்துமாவை குணப்படுத்தும், பல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு தரும். இதைக்கடந்து சருமத்துக்கு எண்ணற்ற நன்மைகளைத்தரும். முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்துக்கு பளிச் தோற்றத்தை தரும். முகத்தில் கொலாஜென் உற்பத்தியை தூண்டும்.

கற்றாழை ஜெல் – தேவையான அளவு

வைட்டமின் இ ஆயில் பில்ஸ் – 1

(மெடிக்கல்களில் கிடைக்கும்)

கிளிசரின் – ஒரு ஸ்பூன்

(நாட்டு மருந்து கடைகள் அல்லது மெடிக்கலில் கிடைக்கும்)

இனிப்பு பாதாம் எண்ணெய் – தேவையான அளவு

சர்க்கரை ஒரு ஸ்பூன்

செய்முறை

கிராம்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை தண்ணீரில் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

கொதித்த கலவையை அப்படியே ஆறவைத்துவிடவேண்டும். ஆறியவுடன், அதை வடிகட்டிக்கொள்ள வேண்டும். வெள்ளை துணியில் வைத்து வடிகட்டுவது சிறந்தது.

அந்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் கிளிசரின், கற்றாழை ஜெல், வைட்டமின் இ எண்ணெய் பில்ஸ் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு மேலே கூறியதுபோல் பயன்படுத்த வேண்டும்.

வடிகட்டும்போது கிடைக்கும் சக்கையை பயன்படுத்தி ஒரு ஸ்கிரப் தயாரிக்க முடியும்.

அந்த பொடியில் ஒரு ஸ்பூன், சர்க்கரை ஒரு ஸ்பூன், இனிப்பு பாதாம் எண்ணெய் கால் ஸ்பூன், கிராம் கொதிக்க வைத்த தண்ணீர் தேவையான அளவு எடுத்து கலந்து, இந்த ஸ்கிரபை செய்துகொள்ள வேண்டும்.

இதை கரும்புள்ளிகள் அல்லது திட்டுகள் உள்ள இடத்தில் தடவி நல்ல மசாஜ் செய்யவேண்டும்.

நன்றாக மசாஜ் செய்யும்போது, அந்தப் பகுதியில் உள்ள கருந்திட்டுகள் மறையும். இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவுபெரும். கட்டாயம் இதை செய்து பார்த்த பயன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி