Dry Ginger Balls : இந்த சின்ன உருண்டை தினமும் ஒன்று போதும்! செரிமான கோளாறை விரட்டி அடிக்கும்!
Mar 31, 2024, 09:56 AM IST
Dry Ginger Balls : இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த சுக்குப்பொடியை தேநீரில் கலந்து தினமும் பருகலாம். பாலில் கலந்து பருகினால் உறக்கம் மேம்படும். வெல்லம், நெய் மற்றும், மஞ்சள்தூள் கலந்து சிறு உருண்டைகளாக்கி தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
சுக்கு – 10 கிராம் (தோல் நீக்கியது)
(சுக்கு இல்லாவிட்டால், காய்ந்த இஞ்சி பவுடர் என்பது கடைகளில் கிடைக்கும். அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.)
ஏலக்காய் – 3
அரிசி மாவு – ஒரு கப்
தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடியளவு
(கொப்பரை தேங்காயை துருவியும் எடுத்துக்கொள்ளலாம். அது நீண்ட நாட்கள் உருண்டையை கெடாமல் வைத்திருக்கும்)
வெல்லம் அல்லது கருப்பட்டி – 200 கிராம்
நெய் – தேவையான அளவு
செய்முறை
சுக்கு மற்றும் ஏலக்காய் இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதை சல்லடையில் சலித்துக்கொள்ள வேண்டும்.
அரிசி மாவை அடுப்பில் வைத்து இரண்டு நிமிடங்கள் வறுத்து, அதையும் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுக்கு, அரிசி மாவுடன், தேங்காய் துருவல் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அதில் வெல்லம் அல்லது கருப்பட்டியை பாகு காய்ச்சி சேர்க்க வேண்டும். பாகு பதம் தேவையில்லை. நன்றாக கரைந்து வந்தாலே போதும்.
பின்னர், நன்றாக திரட்டி, தேவையான அளவு நெய் சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக்கொள்ள வேண்டும். அந்த உருண்டையை தினமும் ஒரு உருண்டை சாப்பிட்டாலே போதும். வயிற்றில் செரிமானம் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்வதுடன், உடலுக்கு ஆரோக்கியமும் வழங்கும்.
ஒரு சிறிய அளவு உருண்டைதான் சாப்பிடவேண்டும். சுக்கை அதிகமாக சாப்பிட்டால் அது வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே இந்த உருண்டையை செய்யும்போதே கவனமாக சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ள வேண்டும்.
தினமும் சிறிது சுக்கு சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
நமது சமையலறையில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களுள் ஒன்று இஞ்சி. இதை காய வைத்தால் கிடைப்பது சுக்கு. இதை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கிராமுக்கு மேல் எடுக்கக்கூடாது. இஞ்சி மற்றும் சுக்கு இரண்டையும் நாம் பல்வேறு உணவு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறோம்.
சுக்கு, பொதுவாக அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. சுக்கு உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றையும் சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது. சித்த மருத்துவம் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் உடலில் சமஅளவில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று குறிப்பிடுகிறது.
சுக்கு செரிமானத்தை அதிகரித்து பசியை தூண்டுகிறது. வயிற்றை சரிசெய்கிறது. சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மூட்டுகளின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
இதில் உள்ள பயோ ஆக்டிவ் குணங்கள், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆக்ஸிடேட்டில் அழுத்ததை குறைத்து, நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
சுக்கு, புரதத்தை கொழுப்பாக்கும் எண்சைம்களைக் கொண்டுள்ளது.
சுக்குப்பொடி, இயற்கையிலே வலி நிவாரணியாக செயல்பட்டு, வலியை குறைக்கிறது.
உடலில் சேரும் அதிக கொழுப்பை குறைக்க சுக்கு உதவுகிறது.
செரிமானத்தை தூண்டுகிறது.
சளியை குணப்படுத்த உதவுகிறது. மழைக்காலத்தில் எற்படும் சளி, இருமல் போன்ற உபாதைகளுக்கு சுக்கு, பனங்கற்கண்டு கசாயம் செய்து பருகினாலே போதும்.
மாதவிடாய் வலியை குணப்படுத்துகிறது.
காலைநேர மயக்கம் மற்றும் சோர்வு, வாந்தி ஆகியவற்றை போக்குகிறது.
நீரிழிவு நோய்க்கு தீர்வாகிறது.
வீக்கத்தை குறைக்கிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த சுக்குப்பொடியை தேநீரில் கலந்து தினமும் பருகலாம். பாலில் கலந்து பருகினால் உறக்கம் மேம்படும். வெல்லம், நெய் மற்றும், மஞ்சள்தூள் கலந்து சிறு உருண்டைகளாக்கி தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
இனிப்புகளில் சேர்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்