தமிழ் செய்திகள்  /  Astrology  /  Kula Devatha Worship: Worship Of Family Deity Helps You In Your Hardships

Family Deity Worship: 5 தேங்காய்… சுத்தமான பசு நெய்; பஞ்சு திரி; கோடி பலன்களை கொட்டும் குல தெய்வ வழிபாடு செய்யும் முறை!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 17, 2024 10:17 AM IST

மொத்தமாக 5 தேங்காய்களை வாங்கிக் கொள்ளுங்கள். அதை நீங்கள் உடைக்கும் பொழுது 10 தேங்காய் மூடிகள் கிடைக்கும். அந்த தேங்காய்களின் மஞ்சள் தேய்த்துக்கொள்ளுங்கள்.ஒரு மூடியை யாராவது ஒருவருக்கு தானம் செய்து விடுங்கள்.

குல தெய்வ வழிபாடு!
குல தெய்வ வழிபாடு!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “குலதெய்வத்தை ஒருபோதும் நீங்கள் மறந்து விடக்கூடாது. உங்களது அப்பா,தாத்தா, மூப்பனார் உள்ளிட்டவர்களின் வெற்றியை தீர்மானித்த இடமாக குலதெய்வ வழிபாடு இருக்கிறது. 

சூரியன், குரு ஆகிய இரண்டு கிரகங்கள் ஆகிய இரண்டும் குலதெய்வத்தை குறிக்கக்கூடிய கிரகங்களாக இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் வலுவாக இருப்பின் குலதெய்வ ஆசீர்வாதமானது உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். அதேபோல ஐந்து மற்றும் ஒன்பது இடங்களின் அதிபதிகள் வலுவாக இருக்கும் போதும் குலதெய்வ ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். 

ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதிகள் சேர்ந்து இருப்பின் குலதெய்வம் உங்களோடு பேசும். குலதெய்வம் என்ன மாதிரியான உருவத்தில் வேண்டுமென்றாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் அதில் உங்கள் முன்னோர்கள் அமர்ந்து வேண்டிக் கொண்ட முறையானது மிக மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். 

அந்த இடத்தில் அப்படியான ஒரு ஆளுமை சக்தி இருக்கும். ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை அன்றும், பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி அன்றும் வழிபாடு செய்ய வேண்டும். அந்த நாட்களில் வழிபாடு செய்வது என்பது சாலச் சிறந்ததாக இருக்கும். 

நீங்கள் குலதெய்வ வழிபாட்டை முறைப்படி செய்யும் போது உங்களுக்கு அபரிவிதமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு குல தெய்வங்களாக ஆண் தெய்வமும் இருக்கிறது, பெண் தெய்வமும் இருக்கிறது என்றால் அமாவாசை அன்று ஆண் தெய்வத்தையும், பௌர்ணமி அன்று பெண் தெய்வத்தையும் வழிபடுங்கள். 

குலதெய்வ வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். மொத்தமாக 5 தேங்காய்களை வாங்கிக் கொள்ளுங்கள். அதை நீங்கள் உடைக்கும் பொழுது 10 தேங்காய் மூடிகள் கிடைக்கும். அந்த தேங்காய்களின் மஞ்சள் தேய்த்துக்கொள்ளுங்கள்.ஒரு மூடியை யாராவது ஒருவருக்கு தானம் செய்து  விடுங்கள். மீதி இருக்கக்கூடிய ஒன்பது தேங்காய் மூடிகளை நன்றாக துடைத்து அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றுங்கள். அதில் பஞ்சு திரியை போட்டு தீபம் ஏற்றி மனதார குல தெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அதிசயங்களை நீங்கள் பாருங்கள். 

இதனுடன் உங்கள் குலதெய்வத்திற்கு வஸ்திரம் சமர்பித்து, படையல் வைத்து வேண்டிக்கொண்டீர்கள் என்றால், நீங்கள் ஏழரை சனியில் இருந்தால் கூட அதனுடைய தாக்கம் குறைய ஆரம்பித்து விடும்” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்