Sukku Malli Coffee: கொட்டும் அடை மழைக்கு இதமாக ஒரு சுக்கு மல்லி காபி குடிக்கலாம் வாங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sukku Malli Coffee: கொட்டும் அடை மழைக்கு இதமாக ஒரு சுக்கு மல்லி காபி குடிக்கலாம் வாங்க!

Sukku Malli Coffee: கொட்டும் அடை மழைக்கு இதமாக ஒரு சுக்கு மல்லி காபி குடிக்கலாம் வாங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 10, 2023 12:51 PM IST

மழை காலத்தில் குளிருக்கு இதமாக மாலை வேளையில் இந்த சுக்கு மல்லி காபி போட்டு குடிச்சு பாருக்க. ருசி அருமையாக இருக்கும்.

சுக்கு மல்லி காபி
சுக்கு மல்லி காபி

தேவையான பொருட்கள்

சுக்கு

மல்லி விதை

மிளகு

ஏலக்காய்

கருப்பட்டி

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து சூடாக்க வேண்டும். அதில் 100 கிராம் அளவு மல்லி விதையை எடுத்து மிதமான சூட்டில் வைத்து வறுக்க வேண்டும். மல்லி வாசனை வர ஆரம்பிக்கும்போது அதை தனியாக ஒரு பிளேட்டிற்கு மாற்ற வேண்டும்.

பின்னர் அதே கடாயில் 3 டேபிள் ஸ்பூன் மிளகை சேர்த்து வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்ட உடன் அதில் 50 கிராம் சுக்கை இடிச்சு எடுத்து அதில் சேர்க்க வேண்டும். சுக்கை மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் ஏலக்காயையும் சேர்த்து லேசாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் வறுத்த பெருட்களை ஆற விட வேண்டும்.

சுக்கு மல்லி மிதமான சூட்டில் இருக்கும் போது மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை ஈரம் இல்லாத ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்து கொள்ள வேண்டும்.

தேவையான போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் அரைத்து வைத்த ஒரு ஸ்பூன் சுக்கு மல்லி பொடியை சேர்த்து கொதிக்க விட வேண்டும். குறைந்தது 5 நிமிடம் கொதிக்க விட்டால் நல்லது.

விருப்பம் உடையவர்கள் இரண்டு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கலாம். கொதிக்கும் பாலில் சுக்கு மல்லி பவுடரை சேர்த்து நன்றாக வேகவிட்டு வடிகட்டி குடிக்கலாம்.

இந்த சுக்கு மல்லி காப்பிக்கு கருப்பட்டி சேர்த்து குடித்தால் சுவை அருமையாக இருக்கும். விருப்பம் உடையவர்கள் நாட்டுச்சக்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.

இந்த சுக்கு மல்லி காப்பி மழை காலத்தில் செரிமானத்திற்கு பெரிதும் உதவும். சளி இருமலை தடுக்க பெரிதும் உதவும்

 னசமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.