தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Jaggery Is The Jaggery You Buy Pure Ways To Check Here Are The Tips

Jaggery : நீங்கள் வாங்கும் வெல்லம் சுத்தமானதா? சரிபார்க்கும் வழிகள்! இதோ டிப்ஸ்!

Priyadarshini R HT Tamil
Jan 07, 2024 03:00 PM IST

நீங்கள் வாங்கும் வெல்லம் சுத்தமாக உள்ளதா என்பதை சோதிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Jaggery : நீங்கள் வாங்கும் வெல்லம் சுத்தமானதா? சரிபார்க்கும் வழிகள்! இதோ டிப்ஸ்!
Jaggery : நீங்கள் வாங்கும் வெல்லம் சுத்தமானதா? சரிபார்க்கும் வழிகள்! இதோ டிப்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

வெல்லத்தில் மாவை கலக்கிறார்கள். எனவே வெல்லத்தை தண்ணீரில் கரைத்துப்பார்க்கும்போது, அடியில் மாவு தங்கினால், அந்த வெல்லத்தில் மாவு கலக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

வெல்லத்திற்கு பளபளப்பை கொடுக்க அதில் எண்ணெய் கலக்கிறார்கள். அது வெல்லத்தின் தரத்தை குறைக்கிறது. இதை கண்டுபிடிக்க வெல்லத்தை கொஞ்சம் எடுத்து உங்கள் கைகளில் தேய்த்து பார்த்தாலே போதும். பிசுபிசுப்பாக இருந்தால் அதில் மினரல் எண்ணெய் கலக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

வெல்லம் இயற்கையாக அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். அந்த நிறத்தில் வேறுபாடு இருந்தால், அதில் செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

வேதிப்பொருட்கள்

வெல்லம் இனிப்பு சுவையும், மண் வாசமும் கொண்டதாகவும் இருக்கும். இதை தவிர வேறு எந்த சுவையோ அல்லது மணமோ வந்தால் அதில் கலப்படம் உள்ளது என்று பொருள்.

அசுத்தங்கள் இருப்பது தெரியவந்தால்

நல்ல வெல்லத்தில் தூசி போன்றவை இருக்கும். கரும்பின் சக்கைகள் நிறைந்திருக்கும். அதைவிட கூடுதலாக தூசி இருந்தால், அது கலப்படம் நிறைந்தது என்று பொருள்.

நிலைத்தன்மை

வெல்லம் அதிக மிருதுவாகவும், அதிக கடினமாகவும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது கலப்படம் நிறைந்தது என்று பொருள். அதில் இந்துப்பு அல்லது ஜிப்சம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கரையும் தன்மை

வெல்லம் எளிதாக தண்ணீரில் கரையும். மண் போன்ற படிமங்கள் தங்கினால், அது கலப்படம் நிறைந்தது என்று பொருள்.

மணம்

இனிப்பு சுவையும், மண் மனமும் கொண்டது. தனிச்சுவை நிறைந்தது. வேதிப்பொருட்களின் மணம் வந்தால் அது கலப்படம் நிறைந்தது என்று பொருள். அழுகிய நாற்றம் வந்தாலும், அதுவும் கலப்படம் நிறைந்தது என்று பொருள்.

சுவை

வெல்லம் தனித்தன்மையானது, அதில் மொலாசஸ் போன்ற சுவை நிறைந்தது. அது அதிக இனிப்புச்சுவை, உலோகம் சுவை கொண்டதாக இருக்கும். இந்தச்சுவை இல்லையென்றால், அது அசுத்தமானது.

WhatsApp channel

டாபிக்ஸ்