செலினியம் செரிந்த உணவுகள் எவை தெரியுமா? நீங்கள் அன்றாடம் உட்கொள்ள வேண்டியவை இவைதான்!
Oct 08, 2024, 05:45 AM IST
செலினியம் செரிந்த உணவுகள் எவை தெரியுமா? நீங்கள் அன்றாடம் உட்கொள்ள வேண்டியவை இவைதான். இது உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய செலினியம் செரிந்த உணவுகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள். செலினியம் நிறைந்த உணவுகள் என்னவென்று தெர்ந்துகொண்டு அவற்றை தினமும் உட்கொண்டு ஆரோக்கிய வாழ்வு பெறுங்கள். செலினியம் என்பது முக்கியமான மினரல் ஆகும். அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது. தைராய்ட் இயக்கத் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் உற்பத்திக்கும் துணை நிற்கிறது. செலினியம் செரிந்த உணவுகளை நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும்போது, அது உங்களுக்கு அன்றாட தேவையான செலினியத்தை கிடைக்கச் செய்கிறது. மேலும் அது உங்களின் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. உங்கள் அன்றாட உணவில் நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகள் சுவையானவை மட்டுமல்ல. இவை செலினியச் சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். இவற்றை உங்கள் சாலட்களில் சேர்த்துக்கொள்ளது உங்கள் உடலுக்கு நல்லது. இவற்றை சாலட்கள், யோகர்ட் அல்லது ஓட்ஸில் சேர்த்து பலன்பெறுங்கள். இது உங்கள் செலினியச் சத்துக்கள் உட்கொள்ளும் அளவை அதிகரிக்கிறது. இதில் நல்ல அளவு வைட்டமின் இ சத்துக்களும் உள்ளன. இது உங்களுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு, உங்கள் செல்களை காக்கிறது.
காளான்
காளான்கள், குறிப்பாக பட்டன் மற்றும் ஷிடேக் காளான்களில் செலினியச் சத்துக்கள் உள்ளது. அதை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. வறுவல், பாஸ்தா, சூப் என செய்து சாப்பிடலாம். இவற்றில் கலோரிகள் குறைவு மற்றும் இதில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இவை உங்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தேர்வாகும்.
பிரவுன் அரிசி
பிரவுன் அரிசி என்பது முழுதானிய உணவு ஆகும். இதில் மிதமான அளவு செலினியச்சத்துக்கள் உள்ளது. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதனுடன் காய்கறி வறுவல்கள், கிரேவிகள், காய்கறி குழம்புகளை சேர்த்து சாப்பிடும்போது அது உங்களுக்கு உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் உள்ளது. அது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
தானியங்கள்
தானியங்களில் தாவர அடிப்படையிலான செலினியச் சத்துக்கள் உள்ளது. இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களின் அன்றாட செலினிய தேவையை பூர்த்தி செய்கிறது. உங்கள் உடலுககு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது.
ஓட்ஸ்
ஓட் ஒரு சிறந்த காலை உணவு தேர்வு மட்டுமல்ல, இது செலினியச் சத்துக்கள் நிறைந்ததும் ஆகும். உங்களுக்கு ஓட்ஸ் உணவு பிடிக்கும் என்றால், அதை உணவில் அல்லது ஓரிரவு ஊறவைத்து ஸ்மூத்திகள் என பல்வேறு வழிகளிலும் சாப்பிடலாம். ஓட்ஸ் உங்களின் நாளை நன்றாக துவக்க உதவும். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் நார்ச்சத்துக்கள் உள்ளது. உங்களின இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
பாலக்கீரை
பாலக்கீரை வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது மட்டுமல்ல, இவை செலினியத்தையும் வழங்கக்கூடியவை. பாலக்கீரையை சாலட்டில் சேர்த்துக்கொள்ளலாம். சூப் அல்லது ஸ்மூத்திகளிலும் சேர்க்கலாம். இதை நீங்கள் சைட் டிஷ்ஷாக செய்துகொள்ளலாம். உங்கள் முக்கிய உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுப்பதுடன், உங்களுக்கு செலினியத்தையும் கொடுக்கிறது.
வீட் பிரட்
வீட் பிரட்டில் செலினியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. உங்கள் உடலில் செலினியச் சத்துக்களை சேர்த்துக்கொள்வதற்கான மற்றொரு வழியாக செலினியம் உள்ளது. முழு கோதுமையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதற்கு பதில், அதை நீங்கள் பிரட்டாக சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்களின் செலினியச் சத்துக்கள் உட்கொள்ளும் அளவை அதிகரிக்கிறது. இது நார்ச்சத்துக்கள் மற்றும் உங்கள் செரிமானத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்களை வழங்கக் கூடியது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
பிரசில் நட்ஸ்கள்
பிரசில் நட்ஸ்களில் செலினியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. உங்களின் அன்றாட தேவையில் ஒன்று அல்லது இரண்டு நட்ஸ்கள் மட்டும் எடுத்தால் அது அன்றைய நாளுக்கான செலினியத் தேவையை பூர்த்தி செய்கிறது. இது உங்களுக்கு செலினியத்தை சேர்க்க எளிமையான வழியாகும். இதில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். இது உங்களுக்கு ஆற்றலைக் கொடுத்து உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
டாபிக்ஸ்