சமையல் செய்யும்போது இத மட்டும் செஞ்சுடாதீங்க! உங்கள் உணவு ருசிக்க உதவும் சமையல் குறிப்புகள் இதோ!
சமையல் செய்யும்போது இத மட்டும் செஞ்சுடாதீங்க! உங்கள் உணவு ருசிக்க உதவும் சமையல் குறிப்புகள் இதோ!

சமையலில் நாம் செய்யக் கூடியவைகள் என்ன என்பது குறித்து பல வழிகாட்டுதல்கள் உள்ளது. ஆனால் செய்யக்கூடாதவைகள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று பாருங்கள். ஏனென்றால் நீங்கள் மெனக்கெட்டு சமைக்கும்போது, சிலவற்றை தவறி செய்துவிடுவதால் அதன் சுவை கெட்டுவிடுகிறது. எனவே நீங்கள் சமைக்கும்போது எதை செய்யக்கூடாது என்பதில் கவனம் செலுத்துங்கள். சிறிய சிஷயங்கள்தான் இதில் கவனம் செலுத்தினால்போதும், உங்கள் சமையல் மணக்கும்.
ரசம்
ரசம் வைக்கும்போது அதை அதிகம் கொதிக்கவிடக்கூடாது. அடுப்பை சிம்மில் வைத்து நுரை கூடி வரும்போது இறக்கவேண்டும். கடைசியாக மல்லித்தழையை தூவிவிடவேண்டும். அப்போதுதான் ரசம் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
காபி
காபி என்பது நமக்கும் சுறுசுறுப்பைத் தரும் பானம். ஒரு சிலருக்கு காபியை குடித்தால்தான அந்த நாளே துவங்கும். அந்த காபி சுவையானதாக இருக்க வேண்டாமா? அதற்கு காபி போடுவதற்கு பாலை நன்றாக காய்ச்சக்கூடாது. முக்கால் பதம் காய்ந்த பாலில் சர்க்கரை மற்றும் கொஞ்சம் தூக்கலாக காபித்தூளை சேர்த்து ஸ்ட்ராங்காக குடித்தால் உங்களுக்கு புத்துணர்வு தரும்.
