வீட்டில் உருளைக்கிழங்கும், முட்டையும் உள்ளதா? சூப்பர் சம்பவம் செய்யலாமா? ஸ்பானிஷ் ஆம்லேட்!
Nov 10, 2024, 01:01 PM IST
வீட்டில் உருளைக்கிழங்கும், முட்டையும் உள்ளதா? சூப்பர் சம்பவம் செய்யலாமா? அதில் ஸ்பானிஷ் ஆம்லேட் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள்.
தினமும் முட்டைகளை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இதனால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். முட்டை புரதச்சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் ஊட்டச்சத்துக்களும் அதிகம். ஊட்டச்சத்துக்களின் உறைவிடம் என்றும் கூறலாம். முட்டையில் இருந்து கிடைக்கும் புரதம் உயர் தர புரதம் ஆகும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. நீங்கள் தினமும் 2 வேகவைத்த முட்டைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். எனவே தினமும் உங்கள் உணவில் முட்டைகள் எடுப்பதை உறுதிப்படுத்தி உங்கள் ஆரோக்கியம் மேம்பட வழிவகுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். முட்டைகளை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு புரதம் (ஒரு முட்டையில் 6 கிராம் உள்ளது), வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி12 (2 வேகவைத்த முட்டையில் 1.6 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 உள்ளது), முட்டையில் 0.6 கிராம் வைட்டமின் பி2 உள்ளது. 24 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. 2 முட்டையில் 28 மைக்ரோகிராம் செலினியச்சத்துக்கள் உள்ளது. கோலைன்கள் நிறைந்தது. இரும்புச்சத்துக்கள், சிங்க் சத்துக்கள் கொண்டது.
உருளைக்கிழங்கின் நன்மைகள்
உருளைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு தேவையான வைட்டமின்களையும் வழங்குகிறது. வைட்டமின் சி, பி6 மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் உடலுக்கு வழங்குகிறது. இது உங்கள் செரிமானத்துக்கு உதவக்கூடியது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. அது கல்லீரல் மற்றும் குடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. வெள்ளை உருளைக்கிழங்கைவிட கத்தரிப்பூ நிற உருளைக்கிழங்கில் 4 மடங்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவி செய்கிறது. இது உட்கொள்ளும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால் அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.
173 கிராம் உருளைக்கிழங்கில், 161 கலோரிகள், 0.2 கிராம் கொழுப்பு, 4.3 கிராம் புரதச்சத்து, 36.6 கிராம் கார்போஹைட்ரேட், 3.8 கிராம் நார்ச்சத்து, 28 சதவீதம் வைட்டமின் சி, 27 சதவீதம் வைட்டமின் பி6, 26 சதவீதம் பொட்டாசியம், 19 சதவீதம் மேங்கனீஸ், 12 சதவீதம் மெக்னீசியம், 12 சதவீதம் பாஸ்பரஸ், 12 சதவீதம் நியாசின், 12 சதவீதம் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட முட்டையை நீங்கள் உருளைக்கிழங்குடன் சேர்த்து ஸ்பானிஷ் ஆம்லேட் செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 2
முட்டை – 3
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு ஸ்பூன்
செய்முறை
உருளைக்கிழங்கை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். கடாயில் எண்ணெய் சேர்த்து உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து பெரிய வெங்காயம், உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
மூன்று முட்டைகளை அடித்து அதில் வறுத்த இந்த உருளைக்கிழங்கு கலவையை சேர்க்கவேண்டும். கலந்து, தேவைப்பட்டால் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து தோசைக்கல்லில் ஆம்லேட்டாக வார்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை சாப்பிட சூப்பர் சுவையானதாக இருக்கும்.
டாபிக்ஸ்