தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Diy Home Decors Idea : அதிகம் சேர்ந்துவிட்ட பழைய பேப்பரை குப்பையில் வீசப்போகிறீர்ளா? வேண்டாம்! இதோ ஐடியா!

DIY Home Decors Idea : அதிகம் சேர்ந்துவிட்ட பழைய பேப்பரை குப்பையில் வீசப்போகிறீர்ளா? வேண்டாம்! இதோ ஐடியா!

Priyadarshini R HT Tamil

Aug 18, 2024, 09:06 AM IST

google News
DIY Home Decors Idea : அதிகம் சேர்ந்துவிட்ட பழைய பேப்பரை குப்பையில் வீசப்போகிறீர்ளா? அதை அப்படியே தூக்கி வீச வேண்டாம். இதோ இங்கு சில ஐடியாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி, அதை வீட்டு உபயோகப்பொருட்களாக மாற்றுங்கள்.
DIY Home Decors Idea : அதிகம் சேர்ந்துவிட்ட பழைய பேப்பரை குப்பையில் வீசப்போகிறீர்ளா? அதை அப்படியே தூக்கி வீச வேண்டாம். இதோ இங்கு சில ஐடியாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி, அதை வீட்டு உபயோகப்பொருட்களாக மாற்றுங்கள்.

DIY Home Decors Idea : அதிகம் சேர்ந்துவிட்ட பழைய பேப்பரை குப்பையில் வீசப்போகிறீர்ளா? அதை அப்படியே தூக்கி வீச வேண்டாம். இதோ இங்கு சில ஐடியாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி, அதை வீட்டு உபயோகப்பொருட்களாக மாற்றுங்கள்.

பழைய செய்தித்தாள் பேப்பர் அதிகம் சேர்ந்து விட்டதால் அதை குப்பையில் தூக்கி வீசப்போகிறீர்களா? வேண்டாம். அதில் நீங்கள் வீட்டு அலங்காரப் பொருட்கள் செய்ய முடியும். இதோ அது எப்படி என்று பாருங்கள்.

மீண்டும் உபயோகிப்பது

உங்கள் வீட்டில் செய்தித்தாள் வாங்குகிறீர்கள் என்றால், மாதத்துக்கு ஒரு கட்டு பேப்பர் கட்டாயம் சேர்ந்துவிடும். பின்னர் அவை எடைக்கோ அல்லது குப்பைக்கோதான் செல்லும். ஆனால், அதை மீண்டும் பயன்படுத்தி எண்ணற்ற விஷயங்களை செய்யமுடியும். இங்கு பழைய பேப்பரை வைத்து என்ன செய்யமுடியும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்தி, உங்கள் வீட்டில் சேரும் பழைய பேப்பருக்கு புதிய உருவம் கொடுக்க முடியும்.

பேப்பர் பவுல்கள்

பேப்பரை நீங்கள் வெட்டி, கிழித்து பல உபயோகப் பொருட்களை செய்யமுடியும். பேப்பரை நீங்கள் பவுல்களாக மாற்ற முடியும். அதற்கு பேப்பரை சிறிய துண்டுகளாக கிழித்துக்கொள்ளவேண்டும். அவற்றை தண்ணீர் மற்றும் பசை அடங்கிய கலவையில் ஊறவைக்கவேண்டும். அதை ஒரு பலூனை ஊதி, அதில் ஒரு பவுல் அல்லது கிண்ண வடிவில் ஒட்டிவைக்கவேண்டும். 

நன்றாக நிறைய லேயர் மேலேமேலே ஒட்டினால்தான், அது நல்ல திக்காக வரும். இது காய்ந்தவுடன், பலூனை வெடிக்கவைத்து வெளியே எடுத்துவிட்டால், அழகிய கிண்ணம் அல்லது பவுல் போன்ற அமைப்பு தயாராகிவிடும். இதில் நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வர்ணம் தீட்டிக்கொள்ளலாம். இதை நீங்கள் தண்ணீர்படாத ட்ரையான இடங்களில் வைத்து, அதில் பொருட்களை போட்டு உபயோகித்துக்கொள்ளலாம்.

பேப்பர் பீட்ஸ் ஹேங்கிங்

பழைய பேப்பரை வைத்து, பேப்பர் பீட்ஸ்களை உருவாக்குவது எளிதான ஒன்று. பேப்பரை நீளமாக வெட்டிக்கொள்ளவேண்டும். முக்கோண வடிவில் வெட்டி அவற்றை ஒரு டூத் பிக்கை வைத்து நன்றாக சுருட்டிக்கொள்ளவேண்டும். அதை இருபக்கங்களிலும் ஒட்டிக்கொள்ளவேண்டும். 

பின்னர் காய வைத்துவிடவேண்டும். காய்ந்த பின்னர், அதில் உங்களுக்கு பிடித்த வர்ண்ம் தீட்டிக்கொள்ளவேண்டும். அந்த வர்ணங்கள் பிரகாசமானதாக இருக்கவேண்டும். இதை நூலில் அழகாக கோர்த்து சுவரில் தொங்கவிட்டால், சூப்பரான வால் டெக்கர் ரெடி.

சுவர் ஓவியங்கள்

கிளாஸி பேப்பர்கள், மேகசின்களின் பேப்பர்களை வைத்து சுவரில் ஓவியங்கள் வரைய முடியும். இந்த பேப்பரை உங்களுக்கு பிடித்த பல வடிவங்களில் வெட்டிக்கொள்ளவேண்டும். ஒரே வடிவில் இருக்கக்கூடாது. இவற்றை கொலாஜ் வடிவில் சுவற்றில் ஒட்டவேண்டும். 

அதற்கு ஒரு வடிவம் கொடுக்கவேண்டும். அந்த வடிவம் ஒரு பூச்சாடி அல்லது யானை என எந்த உருவமாக வேண்டுமானால் இருக்கலாம். அந்த உருவத்தை அவுட்லைனாக்கிவிட்டு, அதில் நீங்கள் இந்த பேப்பர்களை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வெட்டி ஒட்டவேண்டும்.

பரிசு பொருட்களை சுற்றி கட்டும் ரேப்பர்கள்

உங்களிடம் வண்ணங்கள் நிறைந்த பழைய பேப்பர்கள் இருந்தால், அவற்றை தூக்கி வீசிவிடவேண்டாம். அவற்றை பரிசுப்பொருட்களை சுற்றிக்கட்டும், கிஃப்ட் ரேப்களாக மாற்றிவிடலாம். ஆனால் அதில் எதுவும் எழுதியோ அல்லது பிரின்ட் செய்யப்பட்டோ இருக்கக்கூடாது. 

அதை நீங்கள் பரிசுப்பெட்களில் சுற்றிக்கொடுக்கலாம் அல்லது அதிலிருந்து, பரிசுப்பெட்டிகளை சுற்றிக்கட்டும் ‘போ‘க்களை உருவாக்கி அதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இது உங்கள் கிரியேட்டிவிட்யைப் பொருத்தது.

பேப்பர் கூடைகள்

இதற்கு நீண்ட நேரம் எடுக்கும், ஆனால் ஒரு அழகான ஹோம் டெக்கர் என்றால் அது பேப்பர் கூடைகள்தான். அது மட்டுமின்றி உபயோகமானதும் கூட. இதற்கு நீங்கள் பேப்பரை நீளமாக வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். 

அவற்றை நன்றாக உருட்டி, திக்காக்கிக்கொள்ளவேண்டும். அவற்றை வைத்து கூடை பின்னவேண்டும். பின்னர் அவற்றில் வர்ணம் தீட்டி, சணல் கயிறை வைத்துக்கட்டி, முத்துமணிகளை வைத்து அலங்காரம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். 

அதில் நீங்கள் சாவிகள், மோதிரங்கள், தோடுகள் என எதுவேண்டுமானாலும் போட்டுவைத்துக்கொள்ளலாம். நீங்கள் என்ன உபயோகத்துக்கு பயன்படுத்துகிறீர்களோ அதற்கு ஏற்ற வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் தயாரித்து வீட்டுக்கு மேலும் அழகு கூட்டலாம்.

ஓரிகாமி

ஓரிகாமி என்பது பேப்பர் ஆர்ட். அதற்கு நீங்கள் வாங்கும் மேகசின்களில் உள்ள வண்ணமயமான பக்கங்களை வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது உங்களுக்கு பரிசு வந்த பழைய ரேப்களை எடுத்துக்கொள்ளவேண்டும். 

அவற்றை மடித்து பூக்கள், நட்சத்திரங்கள், பறவைகள் என நீங்கள் பல்வேறு வடிவங்களை கொண்டுவரலாம். அவற்றை ஒன்றாக ஒரு நூலில் கட்டி, அதை சுவரில் மாட்டலாம். படுக்கை அறையில் வைக்கலாம் அல்லது படுக்கை அறையில் கட்டிலுக்கு அருகில் உள்ள டேபிளிலில் அலங்காரப் பொருட்களாக வைக்கலாம்.

பேப்பர் கோஸ்டர்கள்

கோஸ்டர்கள் என்றால், டேபிளில் டீ மற்றும் காபி கப்களை வைக்கப் பயன்படுத்தப்படும் சிறிய தட்டுபோன்ற அமைப்புகள். டேபிளில் நேரடியாக காபி, டீ போன்றவற்றை நேரடியாக வைத்தால் அவை அந்த இடத்தில் ஒழுகி டேபிளை நாசப்படுத்திவிடும். பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் மர டேபிள்களை துணி கொண்டு துடைக்க முடியாது, அதற்கு பதில் இதுபோன்ற கோஸ்டர்களை பயன்படுத்தினால் நல்லது. 

நீங்கள் பழைய பேப்பரை ஒரே வட்ட வடிவிலோ அல்லது சதுர வடிவிலோ வெட்டிக்கொள்ளவேண்டும். அதை ஒன்றன்மேல் ஒன்று வைத்து நல்ல திக்காக ஒட்டிக்கொள்ளவேண்டும். நல்ல வெயிலில் வைத்து உலர்த்தி பசையின் ஈரப்பதம் போனவுடன், வர்ணங்கள் தீட்டி காய வைத்து, டைனிங் டேபிள் கோஸ்டர்களாக்கிவிடலாம்.

பேப்பர் பூக்கள்

ஒரே வண்ணத்தில் உள்ள பேப்பர்களை தனித்தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றில் இருந்து சிறியி பூக்கள் முதல் பெரிய பூக்கள் வரை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அவற்றை நல்ல ஒரு சில்வர் நூலில் மாலையாகக் கட்டவேண்டும். இதை நீங்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் மாட்டிக்கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை