Kayal Serial: பத்திரிகை கொடுக்கப்போன இடத்தில் பஞ்சாயத்து.. விழியை பிதுக்கிய ராஜலட்சுமி.. கருவாடாகும் கயல்!
Kayal Serial: “எப்போதும் தவறு என்றால் தவறு என்றும் சரி என்றால் சரி என்றும் முகத்திற்கு நேராக பேசும் நீ, உன்னுடைய குடும்பத்திற்காக இவ்வளவு தாழ்ந்து செல்வது எனக்கு” - கருவாடாகும் கயல்!
Kayal Serial: பத்திரிகை கொடுக்கப்போன இடத்தில் பஞ்சாயத்து.. விழியை பிதுக்கிய ராஜலட்சுமி.. கருவாடாகும் கயல்!
கயல் சீரியலில் நடப்பது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கயல் சீரியலில் நேற்று தன்னுடைய அம்மாவின் ஆசைக்காக, கயல் தர்மலிங்கம் வீட்டிற்கு சென்று தாம்பலம் தட்டுடன் பத்திரிக்கை வைத்தாள். ஆனால் தர்மலிங்கமோ, உன்னுடைய அம்மாவின் ஆசைக்காகவெல்லாம் நான் அங்கு வரமாட்டேன். இந்த பொய்யான மரியாதையை நீ வேறு எங்காவது சென்று காண்பி. எனக்கு உண்மையான மரியாதை தான் வேண்டும் என்று சரமாரியாக சாடினார்.
ஆனாலும் பொறுமையாக இருந்த கயல், பெரியம்மா பெரியப்பா நீங்கள் என்னுடைய கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைக்க வேண்டாம். ஆனால் நான் எழிலுடன் தாலி கட்டும் பொழுது, நீங்கள் என் கண் முன்னே இருக்க வேண்டும் என்று சொன்னாள். அத்தோடு தாம்பூல தட்டையும் வைத்து, வீட்டை விட்டு கிளம்பினாள்.