Simran about Prashanth: 'பிரசாந்த் என்னோட ராசியான ஜோடி’ - பழையதை நினைத்து அந்தகன் சக்ஸஸ் மீட்டில் உருகிய சிம்ரன்-actress simran said that prashanth was her ideal pair in andhagan success meet - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Simran About Prashanth: 'பிரசாந்த் என்னோட ராசியான ஜோடி’ - பழையதை நினைத்து அந்தகன் சக்ஸஸ் மீட்டில் உருகிய சிம்ரன்

Simran about Prashanth: 'பிரசாந்த் என்னோட ராசியான ஜோடி’ - பழையதை நினைத்து அந்தகன் சக்ஸஸ் மீட்டில் உருகிய சிம்ரன்

Marimuthu M HT Tamil
Aug 17, 2024 09:33 AM IST

Simran about Prashanth: 'பிரசாந்த் என்னோட ராசியான ஜோடி’ - பழையதை நினைத்து அந்தகன் சக்ஸஸ் மீட்டில் உருகிய சிம்ரன் உடைய பேட்டி வைரல் ஆகி வருகிறது.

Simran about Prashanth: 'பிரசாந்த் என்னோட ராசியான ஜோடி’ - பழையதை நினைத்து அந்தகன் சக்ஸஸ் மீட்டில் உருகிய சிம்ரன்
Simran about Prashanth: 'பிரசாந்த் என்னோட ராசியான ஜோடி’ - பழையதை நினைத்து அந்தகன் சக்ஸஸ் மீட்டில் உருகிய சிம்ரன்

அந்தகன் சக்ஸஸ் மீட்டில் உருக்கமாகப் பேசிய நடிகை சிம்ரன்:

இந்நிலையில் படம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 16ஆம் தேதியான நேற்று படக்குழுவினர் சார்பில், சென்னையில் வெற்றிவிழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய நடிகை சிம்ரன், ‘’என்னுடைய சினிமா வாழ்க்கையில் இது 29ஆவது வருடம் இது. அடுத்து 30ஆவது வருடத்தை நோக்கிப் பயணம் போய்க்கொண்டிருக்கிறது. ரொம்ப அழகான இந்த சினிமா பயணத்தில், சூப்பர் டூப்பர் ஹிட்டாயிருக்கு, நம்ம அந்தகன். எக்ஸ்ட்ரீம்லி பியூட்டிஃபுல். எனக்கு வாய்ப்பு கொடுத்த தியாகராஜன் சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. அதை என் மனதில் இருந்து சொல்கிறேன்.

சூட்டிங் நடக்கும்போது, வசனங்கள் இப்படி பேசலாமா அப்படின்னு கேட்கும்போது, இல்லை, சிம்ரன் இப்படி பேசினால் தான் கரெக்ட்டாக இருக்கும். அப்படி பொறுமையாக சொல்லித்தருவாங்க. அந்தகன் செட்டில் சத்தமே கேட்காது. எவ்வளவு அமைதியாக எடுக்கமுடியுமோ அப்படி எடுத்தார்கள். திரைக்கதை, வசனம், நடிகர்களை கையாளுறது எல்லாம் ஈஸி கிடையாது. தியாகராஜன் சாரோட எனர்ஜியைப் பார்க்கும்போது அப்படி இருக்கும். என்னுடைய வேலை மாலை 6 மணிக்கு முடியும்போது, அவங்க இன்னொரு ஷிஃப்ட் சூட்டிங் வேலைகளுக்குத் தயார் ஆவாங்க. அவங்களோட எனர்ஜி அப்படி இருக்கும். நாங்கள் எல்லோரும் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம் சார்.

பிரசாந்த், என்னோட ராசியான ஜோடி. பிரசாந்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி. திரும்பி என்னோட சேர்ந்து இன்னொரு ஹிட். நன்றி பிரசாந்த்.

பிரியா ஆனந்த் சூப்பர் டூப்பர் ஜோடி. புது ஜோடி. ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க. படத்தில் பார்க்கும்போது ரொம்ப அழகா இருந்தீங்க. ரொம்ப இயல்பாக அறிவுப்பூர்வமாக நடிச்சிருக்காங்க. இன்னும் நிறையப் பெரிய படங்கள் செய்யணும். ஆம். அவங்க பான் இந்தியா ஸ்டார்.

’கே.எஸ். ரவிக்குமார் எனக்கு குரு’- சிம்ரன்:

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நான் நான்கு படங்கள் நடிச்சிருக்கேன். நீங்க என்னோட குரு ரவிக்குமார் சார். இப்போது தமிழில் நான் இவ்வளவு பேசுறேன்னா, அதற்கு நீங்கள் தான் காரணம். ஒவ்வொன்றையும் பொறுமையாக சொல்லித் தருவீர்கள். அவ்வளவு ஒழுக்கமாக அவரோட செட்டில் இருக்கும். 9 மணிக்கு சூட் என்றால், 9:05-க்கு முதல் ஷாட். பிரேக்குனா பிரேக்கு, பேக்கப் என்றால் பேக்கப் தான். அவர் மனதளவில் ரொம்ப பெருந்தன்மையானவர். நிறைய பேருக்கு உதவி செய்தவர்.

மீண்டும் உங்கள் எல்லோருடனும் பணியாற்றி பெரிய ஹிட் கொடுக்க முடிஞ்சது மகிழ்ச்சி. இது எனக்கு இன்னொரு லெவல் ஹிட். என்னோட கடவுளுக்கு, அம்மா அப்பாவுக்கு, என்னோட இயக்குநர் தியாகராஜன் சார், பிரசாந்த், பிரியா ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார் சார் மற்றும் மேடையில் இருக்கும் அனைவரது ஒத்துழைப்பும் இல்லையென்றால் என்னால் இந்த மேடையில் நிற்கமுடியாது.எல்லோருக்கும் நன்றி. இன்னும் இன்னும் 30 ஆண்டுகள் நடிக்கணும். திரைவாழ்வில் 60 ஆண்டுகளை நான் கொண்டாடணும்னு எனக்கு ஆசை.

அந்தகன் மூலம் எனக்கு இன்னொரு வாழ்வு கிடைச்சிருக்கு. மீண்டும் இதே குழுவுடன் பணியாற்றனும். அனைவருக்கும் நன்றி’’என்றார்.

அந்தகன் படத்துக்கு முன்னதாக பிரசாந்த் மற்றும் சிம்ரன் இருவரும் சேர்ந்து, கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், தமிழ் ஆகியப் படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.