3 Zodiac: சாட்டையடி சக்கை அடி அடிக்கும் புதன்.. வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் அடி வாங்கும் ராசிகள்.. தப்பிக்க முடியாது-lets see about the zodiac signs that lord mercury is going to drive away - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  3 Zodiac: சாட்டையடி சக்கை அடி அடிக்கும் புதன்.. வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் அடி வாங்கும் ராசிகள்.. தப்பிக்க முடியாது

3 Zodiac: சாட்டையடி சக்கை அடி அடிக்கும் புதன்.. வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் அடி வாங்கும் ராசிகள்.. தப்பிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 17, 2024 12:56 PM IST

Lord Mercury: புதன் பகவான் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று தனுசு ராசிக்கு மாறுகிறார். புதன் பகவானின் பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிக்கலை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

3 Zodiac: சாட்டையடி சக்கை அடி அடிக்கும் புதன்.. வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் அடி வாங்கும் ராசிகள்.. தப்பிக்க முடியாது
3 Zodiac: சாட்டையடி சக்கை அடி அடிக்கும் புதன்.. வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் அடி வாங்கும் ராசிகள்.. தப்பிக்க முடியாது

புதன் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல மிகவும் குறுகிய காலம் எடுத்துக் கொள்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அதிகமாக இருக்கும். புதன் பகவான் முதன் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் பகவான் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று தனுசு ராசிக்கு மாறுகிறார். புதன் பகவானின் பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிக்கலை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

புதன் பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டு வழியாக செல்கின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபார வாழ்க்கையில் சிக்கல்கள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை சேமிக்க முடியாமல் சிரமங்கள் ஏற்படக்கூடும். புதன் பகவானால் உங்களுக்கு மன அமைதி மற்றும் நல்லிணக்கம் கெடும். 

வியாபாரத்தில் மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய சொத்துக்கள் வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முடிவுகள் எடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் புதன் பகவான் இரண்டாவது வீட்டிற்குள் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் அதிக முயற்சி கொண்டு மற்றவர்களிடம் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும். மன தைரியம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

எந்த ஒரு செயலையும் முடிப்பதற்கு கடினமான சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுத்த காரியங்கள் முடிப்பதற்கு சட்ட தாமதமாக

கடக ராசி

உங்கள் ராசியில் பின்னோக்கிய பயணம் புதன் பகவான் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சில நேரங்களில் உங்களுக்கு சவாலான சூழ்நிலை உண்டாகும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை மிகவும் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு சற்று தாமதமாகும் .

தொழில் வாழ்க்கை மிகவும் சிக்கலாக இருக்கும். வியாபாரத்தில் மோசமான சூழ்நிலை உண்டாகும். உங்கள் ஆற்றல் அதிகமாக செலவிட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது சோதனை காலகட்டமாக உங்களுக்கு இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9