தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cholesterol Control : அதிக கொழுப்பு உடலில் சேர்ந்துவிட்டதால் அவதியா? அவற்றை அடித்து விரட்டும் உணவுகள்!

Cholesterol Control : அதிக கொழுப்பு உடலில் சேர்ந்துவிட்டதால் அவதியா? அவற்றை அடித்து விரட்டும் உணவுகள்!

Priyadarshini R HT Tamil

Mar 19, 2024, 04:25 PM IST

google News
உடலில் அதிக கொழுப்பு மற்றும் தமனிகளில் ஏற்படும் அடைப்பை தடுக்கும் 10 சூப்பர் உணவுகள் இவைதான்.
உடலில் அதிக கொழுப்பு மற்றும் தமனிகளில் ஏற்படும் அடைப்பை தடுக்கும் 10 சூப்பர் உணவுகள் இவைதான்.

உடலில் அதிக கொழுப்பு மற்றும் தமனிகளில் ஏற்படும் அடைப்பை தடுக்கும் 10 சூப்பர் உணவுகள் இவைதான்.

அதிக கொழுப்பை குறைக்கும் சூப்பர் உணவுகள்

கொழுப்பை கரைக்கும் உணவுகள் மேலும் தமனிகளில் உள்ள அடைப்பையும் நீக்க உதவும் சூப்பர் உணவுகள் என்று அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு மற்றும் இயற்கை தெரபிகள் மூலம் உங்கள் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸ் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, தொடர்ந்து எடுப்பதால் உங்கள் உடலில் உள்ள ரத்த கொழுப்பை குறைக்கிறது. இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. எனவே உங்கள் உணவில் ஓட்ஸ் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

முழு தானியங்கள்

பார்லி உள்ளிட்ட அனைத்து முழு தானியங்களிலும் அதிக கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இவையனைத்தும் உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. உங்கள் தமனிகளுக்கு வலுகொடுக்கிறது.

சிட்ரிக் அமில உணவுகள்

சிட்ரிக் அமில உணவுகள், அதாவது திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற உணவுகளில் இதயத்து ஆரோக்கியமளிக்கும் ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இந்த பழங்களில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உங்கள் உடலில உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. எனவே உங்கள் உணவில் அதிகளவில் சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

மீன்

சால்மன், டூனா போன்ற மீன்களில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. இவை எண்ணெய் நிறைந்த மீன்கள். இவை உங்கள் தமனிகளில் தங்கும் பிளேகுகளின் அளவை குறைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

நட்ஸ்

வால்நட்கள், பாதாம் போன்ற நட்ஸ்கள் இதயத்துக்கு மிகவும் சிறந்தது. இவற்றை எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகள் குறைகிறது.

அவகேடோ

அவகேடோவில் மேனோ சேச்சுரேடட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவை உடலுக்கு நன்மை தரும் ஹெச்.டி.எல் கொழுப்பை அதிகரித்து, தீங்கு விளைவிக்கும் எல்.டி.எல் கொழுப்பை குறைக்கிறது. அவகேடோவை உங்கள் அன்றாட உணவில் எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் ஆரோக்கிய கொழுப்புகள் சேர்வதை உறுதிப்படுத்துகிறது. இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

பெரிகள்

ஸ்டாரபெரி, ப்ளூபெரி, ராஸ்பெரி மற்றும் ப்ளாக் பெரிகள் ஆகிய அனைத்து வகை பெரிகளும் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. அது உங்கள் உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் வீக்கம் ஏற்படுவதையும் குறைக்கிறது.

பருப்பு வகைகள்

பீன்ஸ்கள், பருப்பு வகைகள், கொண்டக்கடலை போன்றவற்றில் அதிகளவில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள், புரதம் மற்றும் தாவர அடிப்படை வேதிப்பொருட்கள் உள்ளன. அவை கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டவை. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த பருப்புகளை அடிக்கடி உணவு, சாலட், சூப் என எதில் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட உங்கள் உடல் ஆரோக்கியம் பெருகும். உடலில் தேவையில்லாமல் சேரும் கொழுப்புகள் கரைந்தோடும்.

கீரைகள்

கீரைகள், வெந்தயக் கீரை, பாலக்கீரை போன்றவற்றில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றில் கலோரிகள் குறைவு. இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தவை. இவற்றையும் உங்கள் உணவில் அதிகளவில் அடிக்கடி எடுத்துக்கொள்வது, உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.

வெண்டைக்காய் மற்றும் கத்தரிக்காய்

அனைத்து காய்கறிகளுமே உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியவைதான் என்றாலும், வெண்டைக்காய் மற்றும் கத்தரிக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவையிரண்டும் கலோரிகள் குறைவான காய்கறிகள் என்று அழைக்கப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை