கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Mar 14, 2024
Hindustan Times Tamil
இனிப்பும், புளிப்பும் மிக்க சுவை கொண்ட கருப்பு திராட்சை சரும பிரச்னைகளை போக்குவது, எடை குறைப்பு உள்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
செல்கள் சேதமடைவதை தடுத்து, டயபிடிஸ், புற்றுநோய், இதய நோய் உள்பட பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கருப்பு திராட்சையில் இருக்கும் ரெஸ்வெர்டால் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய் ஆபத்தை தடுக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
டயபிடிஸ் ஆபத்தை குறைக்கிறது
இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைத்து ரத்த சர்க்கரை அளவை குறைத்து டயபிடிஸ் பாதிப்பு ஆபத்தை தடுக்கிறது
அல்சைமர் நோய் பாதிப்பை குறைக்கிறது
கருப்பு திராட்சையில் இருக்கும் பண்புகள் நினைவாற்றலை பெருக்கி, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் அல்சைமர் நோய் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கருப்பு திராட்சையில் இருக்கும் ஆந்தோ சையனின்ஸ் என்கிற ஆன்டி ஆக்சிடன்ட்கள் புற ஊதை கதிர்கள் பாதிப்புக்கு எதிராக போராடுவதுடன் சரும புற்று நோய் பாதிப்பை தடுக்கிறது
உடல் பருமனை தடுக்கிறது
கருப்பு திராட்சையில் இருக்கும் டெரோஸ்டில்பீன், ரெஸ்வெராட்ரோல் போன்றவை உடல் பருமனுக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது. இவை உடல் ஆற்றலை சீர்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நாளை முதல் சூரியன் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டுவார் பாருங்க!