வரமல்லியை வைத்து சட்னி செய்ய முடியுமா? அது அனைத்து டிஃபனுக்கு ஏற்றதாக இருக்கும்! இதோ ரெசிபி!
Nov 03, 2024, 11:44 AM IST
வரமல்லியை வைத்து சட்னி செய்ய முடியுமா? அது அனைத்து டிஃபனுக்கு ஏற்றதாக இருக்கும். சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வரகொத்தமல்லியில் உள்ள நன்மைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். வரமல்லி என்பது இந்திய சமையலறையில் கட்டாயம் இடம்பெறும் ஒன்று. இது இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்துப்படுகிறது. இதை ஊறவைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஓரிரவு ஊறவைக்கும்போது அதன் சத்துக்கள் அனைத்தும் இறங்கிவிடும். வரமல்லி தைராய்டு பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது. ஓரிரவு ஊறிய வரமல்லி தண்ணீரை முதலில் வெறும் வயிற்றில் காலை எழுந்தவுடன் பருகிவிடவேண்டும். இரும்பு, பொட்டாசியம் மற்றும் சில முக்கிய மினரல்களுடன் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது வரமல்லி. நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் நிறைந்தது. வரமல்லியின் சத்துக்கள் முழுவதும் கிடைக்க வேண்டுமெனில் அதை ஊறவைத்த தண்ணீரை பருகும்போதுதான் கிடைக்கும். வரமல்லி செரிமானத்தை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வரமல்லி விதைகள் வாயுத்தொல்லைகளை நீக்கும். வயிறு உப்புசம் குறையும். குடல் ஆரோக்கியம் மேம்படும்.
வரமல்லி விதைகளில் உள்ள ஹைப்போகிளைசெமிக் உட்பொருட்கள், நீரிழிவு நோயயை கட்டுப்படுத்த உதவுகிறது. வரமல்லியில் உள்ள வீக்கத்துக்கு எதிரான வேதிப்பொருட்கள் உள்ளது. உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும் தன்மைகொண்டது வரமல்லி விதைகள். வரமல்லியில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலில் ஃப்ரீ ராடிக்கல்ஸை எதிர்த்து போராடுகிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்ததில் இருந்து உடலை காக்கிறது. வரமல்லியில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள், உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இந்த தண்ணீரை பருகும்போது வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கிறது. இதனால் தேவையற்ற பொருட்களை உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. மாதவிடாய் பிரச்னைகளுடன் தொடர்புடைய கோளாறுகளையும், அசவுகர்யங்களையும் சரிசெய்ய வரமல்லி உதவுகிறது. வரமல்லி விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வரமல்லி விதைகள் உங்கள் மனதை இயற்கை முறையில் அமைதிப்படுத்தும். டென்சனை குறைத்து மன அமைதியை அதிகரிக்கிறது. பயம் மற்றும் பதற்றத்தை போக்குகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த வரமல்லியில் நீங்கள் சட்னி செய்ய முடியும். பொதுவாக மசாலாக்களில் பயன்படுத்தப்படும் வரமல்லிவை வைத்து சட்னி அரைக்கலாம். அது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – அரை கப்
முழு வர கொத்தமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்
உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 2
புளி – சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
கடாயை சூடாக்கி, அதில் முழு வர கொத்தமல்லி, உளுந்து, கடலை பருப்பு ஆகிய மூன்றையும் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். பருப்புகள் நல்ல பொன்னிறமானவுடன், வர மிளகாய், புளி, தேங்காய் துருவல் ஆகிய அனைத்தையும் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
இவையனைத்தும் ஆறியவுடன், அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து துவையல் பதம் வரும் வரை அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவேண்டும். அது சூடானவுடன், அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்க்கவேண்டும்.
இதை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சூடான சாதத்தில் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி பிடித்து சாப்பிடலாம். சூப்பரான சுவையில் அசத்தும்.
டாபிக்ஸ்