தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கிட்னி ப்ராப்ளம் இனி இல்ல; சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைந்தோடச் செய்யும் எளிய வீட்டு தீர்வுகள்!

கிட்னி ப்ராப்ளம் இனி இல்ல; சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைந்தோடச் செய்யும் எளிய வீட்டு தீர்வுகள்!

Priyadarshini R HT Tamil

Nov 03, 2024, 11:02 AM IST

google News
கிட்னி ப்ராப்ளம் இனி இல்லை என்று கூறுமளவுக்கு சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைந்தோடச் செய்யும் எளிய வீட்டு தீர்வுகள் சிலவற்றை இங்கு காணலாம்.
கிட்னி ப்ராப்ளம் இனி இல்லை என்று கூறுமளவுக்கு சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைந்தோடச் செய்யும் எளிய வீட்டு தீர்வுகள் சிலவற்றை இங்கு காணலாம்.

கிட்னி ப்ராப்ளம் இனி இல்லை என்று கூறுமளவுக்கு சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைந்தோடச் செய்யும் எளிய வீட்டு தீர்வுகள் சிலவற்றை இங்கு காணலாம்.

சிறுநீரக கற்கள் ஏற்படும் காரணங்கள் என்னவென்று பாருங்கள். நமது உடலில் உப்பு மற்றும் மினரல்கள் அதிகம் சேர்ந்து விட்டால் அது சிறுநீரகத்தில் கற்களாக படிந்து விடுகிறது. குறிப்பிட்ட வகை உணவுகள், அதிக உடல் எடை, சில மருத்துவ கோளாறுகள் மற்றும் சில மருந்துகள் மற்றும் உணவு சப்ளிமென்ட்கள் ஆகிய அனைத்தும்தான், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணமாகின்றன. சிறுநீர் பாதையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சிறுநீரக கல்லால் பாதிப்பு ஏற்படலாம். சிறுநீரகம் முதல் வயிறுவரை இது தொடரும். சிறுநீரகத்தில் கற்கள் தோன்றிவிட்டால் சிறுநீர் தண்ணீராக இல்லாமல் திக்காகிவிடும். அவை வெளியேறும்போது கடுமையான வலி ஏற்படும். ஆனால் சிறுநீரகக் கற்கள் நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தாது. அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, இயற்கை முறையில் வெளியேற்றுவது சிறந்தது.

அறுவைசிகிச்சை செய்யும்போது, அது மீண்டும், மீண்டும் உருவாகத் துவங்கும். சிறுநீரகத்தில் கற்கள் வந்துவிட்டாலே நாம் அதிக தண்ணீர் பருகவேண்டும். அதிகளவு தண்ணீர் பருகிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் அதிக முறை சிறுநீர் கழிப்போம். அதன் வழியாக கல்லும் வெளியேறிவிடும். வலியை குறைக்க வலி நிவாரணி எடுத்துக்கொள்ளப்படும். சிறுநீர் பாதையில் கற்கள் தேங்கிவிட்டால், சிறுநீரக தொற்று ஏற்பட்டு, அறுவைசிகிச்சை வரை கொண்டு செல்லும் வாய்ப்புள்ளது. எனவே சிறிய அளவில் இருக்கும்போதே கவனம் தேவை.

அறிகுறிகள்

சிறுநீரகத்தில் கற்கள் தோன்றினால் அவற்றை போக்கும் இயற்கை வழிகள்

வயிறு முதல் சிறுநீர் பாதையில் கடும் வலி

விட்டுவிட்டு வலி ஏற்படும்.

சிறுநீர் கழிக்கும்போது வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.

சிறுநீர் சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் கழித்தல்

கடும் துர்நாற்றத்துடன் சிறுநீர் கழித்தல்

வழக்கத்தை விட அதிகம் சிறுநீர் கழிப்பது அல்லது குறைவாக கழிப்புது

வாந்தி மற்றும் மயக்கம்

காய்ச்சல் மற்றும் தொற்று ஏற்படும்போது உடலில் அதிக குளிர் மற்றும் நடுக்கம் ஏற்படுவது,

இந்த அறிகுறிகள் அதிகம் ஏற்படும்போதும் அல்லது சிறுநீரில் ரத்தம் வெளியேறும்போதும் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

சிறுநீரகக் கற்களைப் போக்கும் சில வழிகளை நாம் வீட்டிலிருந்தே கடைபிடிக்க முடியும். இதனால், அது நமக்கு பக்கவிளைவுகளும் ஏற்படாது. சிறுநிரகத்தில் உள்ள கற்களும் கரைந்துவிடும்.

சிறுநீரகக்கற்களை போக்கும் எளிய வீட்டுத்தீர்வுகள்

தேவையான பொருட்கள்

துளசிச் சாறு – ஒரு ஸ்பூன்

தேன் – ஒரு ஸ்பூன்

செய்முறை

துளசிச்சாறு மற்றும் தேனை கலந்து பருகினாலே தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து பருகி வந்தாலே போதும். அது உங்கள் சிறுநீரகத்தில் தேங்கும் கற்களை கரைத்து வெளியேற்றிவிடும்.

வாழைத்தண்டின் சாற்றை அடிக்கடிபருகிவரவேண்டும் அல்லது வாழைத்தண்டை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனால் உங்கள் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறும்.

தேவையான பொருட்கள்

கொள்ளு – 4 ஸ்பூன்

தண்ணீர் – ஒரு லிட்டர்

செய்முறை

ஒரு லிட்டர் தண்ணீரில் 4 ஸ்பூன் கொள்ளு சேர்த்து அந்த தண்ணீர் கால் லிட்டராக குறையும் வரை நன்றாகக் கொதிக்கவிடவேண்டும். இதை வடிகட்டி பருகலாம். இதனால் சிறுநீரகக் கற்களும் நீங்கும். உடலில் சளி, இருமல் மற்றும் சுவாசம் தொடர்பான தொற்றுக்களும் குணமாகும்.

தேவையான பொருட்கள்

கொள்ளுச் சாறு – ஒரு ஸ்பூன்

மாதுளை பழச்சாறு – ஒரு ஸ்பூன்

செய்முறை

கொள்ளு சாறு மற்றும் மாதுளை பழத்தின் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தொடர்ந்து பருகிவர சிறுநீரக கற்கள் கரைந்தோடும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

அடுத்த செய்தி