தர்ப்பூசணியில் ரசம் வைக்க முடியுமா? உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்! இனிப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு சுவையானது!
தர்ப்பூசணியில் ரசம் வைக்க முடியுமா? வைக்க முடியும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இந்த ரசம், இனிப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு சுவையானது.
ஒரு கப் தர்ப்பூசணியில் 45.6 கலோரிகள் உள்ளது. 0.2 கிராம் கொழுப்பு, 1.52 மில்லி கிராம் சோடியம், 11.5 கிராம் கார்போஹைட்ரேட், 0.6 கிராம் ஃபைபர், 12.3 மில்லிகிராம் வைட்டமின் சி, 170 மில்லிகிராம் பொட்டாசியம், 10 மில்லிகிராம் கால்சியம், வைட்டமின் ஏ 865 மைக்ரோகிராம், லைக்கோபெனே 6,890 மைக்ரோகிராம் உள்ளது. தர்ப்பூசணிப்பழத்தை தினமும் இரண்டு கப் எடுத்துக்கொள்ளலாம். கோடைக்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய பழங்களுள் ஒன்றான தர்ப்பூசணி உள்ளது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின் பி6 உடல் புரதச்சத்துக்களை உடைக்க உதவி, நரம்பு மண்டல இயக்கத்துக்கு துணைபுரிந்து, நோய் எதிர்ப்புக்கு வழிகோலுகிறது. இயற்கை லைக்கோபெனே கிடைக்க வழிவகுக்கிறது. நீர்ச்சத்தை கொடுக்கிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதய ஆரோக்கியம் அதிகரிக்கிறது. புற்றுநோய் வாய்ப்பை குறைக்கிறது. வீக்கத்தை குறைக்கும் தன்மைகொண்டது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தசைவலியைபோக்குகிறது. தசை சேதத்தை தடுக்கிறது.
தர்ப்பூசணியின் விதைகளும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதை உலர்த்தி உட்கொள்ளலாம். அதன் தோலிலும் சாம்பார், அல்வா என உணவுப்பொருட்களை செய்து சாப்பிடலாம். இத்தனை நன்மைகள் நிறைந்த தர்ப்பூசணியில் ரசம் வைக்க முடியும். இந்த ரசம் வித்யாசமான சுவையானதாக இருக்கும். இது நெல்லிக்காயும் சேர்த்து செய்யப்படும்போது இந்த ரசம் இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, உப்பு என பல சுவை நிறைந்ததாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
விதை நீக்கி சாறு எடுத்த தர்பூசணி பழச்சாறு – ஒரு கப்
வேக வைத்த துவரம் பருப்பை மசித்து எடுத்த தண்ணீர் – ஒரு கப்
புளித் தண்ணீர் – கால் கப்
(புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்துக்கொண்டு கரைத்து தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவேண்டும்)
நெல்லிக்காய் சாறு – கால் கப்
மிளகுத் தூள் – அரை ஸ்பூன்
ரசப்பொடி – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்துழை – சிறிதளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
நெய் – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானவுடன், இதில் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.
அதில் புளித்தண்ணீர், பருப்பு தண்ணீர், நெல்லிச்சாறு தர்ப்பூசணிச் சாறு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும். அதில் ரசப்பொடி, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
நுரை கட்டி வரும்போது இறக்கிவிடவேண்டும். வித்யாசமான இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு கலந்த வித்யாசமான சுவை மிக்கது இந்த தர்பூசணி ரசம். உடலுக்கு குளிர்ச்சி தரும். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதை நீங்கள் சூப் போலவும் பருகலாம். ரசம்போல சாதத்தில் ஊற்றிக்கொண்டும் சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு ரோஸ்ட் சிறந்தது. அப்பளமும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஆரோக்கிய குறிப்புகள், ரெசிபிக்கள் ஆகியவற்றை, தேர்ந்தெடுத்து தினமும் ஹெச். டி. தமிழ் வழங்கி வருகிறது. எனவே இதுபோன்ற தகவல்களைப் பெறுவதற்கு நீங்கள் எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்