தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள்! கால்சியச் சத்து கவலை வேண்டாம்! இந்த பழங்கள் போதும்!

Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள்! கால்சியச் சத்து கவலை வேண்டாம்! இந்த பழங்கள் போதும்!

Priyadarshini R HT Tamil

Sep 13, 2024, 03:15 PM IST

google News
Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள், கால்சியச் சத்து கவலை வேண்டாம். இந்த பழங்கள் போதும்.
Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள், கால்சியச் சத்து கவலை வேண்டாம். இந்த பழங்கள் போதும்.

Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள், கால்சியச் சத்து கவலை வேண்டாம். இந்த பழங்கள் போதும்.

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

நமது உடலுக்கு, எலும்புக்கு, பற்களுக்கு என கால்சிய சத்தின் தேவை அதிகம். கால்சியம் அதிகம் உள்ள பிரதான உணவு பால். ஆனால் பாலை குழந்தை வயது வரை மட்டும்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு பின்னர் அது வெறும் மருந்து மட்டும்தான். ஆனால் நமது உடலுக்கு கால்சியம் வேண்டும். அதை எதில் இருந்து பெறுவது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் இருந்து கால்சியச் சத்துக்களை எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பாக நீங்கள் பால் எடுத்துக்கொள்ளவில்லையென்றால், முக்கியமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அதிகளவில் கால்சியச் சத்துக்கள் உள்ளன. அந்த பழங்கள் என்னவென்று பார்க்கலாம். இந்தப்பழங்களை நீங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். அது உங்களுக்கு கால்சியச்சத்துக்களை மட்டும் அள்ளிக்கொடுக்கவில்லை. மேலும் உடலுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் கிடைக்கச் செய்கிறது.

பப்பாளி

100 கிராம் பப்பாளி பழத்தில் 20 மில்லி கிராம் கால்சியம் சத்து கிடைக்கிறது.

கிவி

100 கிராம் கிவி பழத்தில் 40 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது.

பேரிட்சை பழம்

100 கிராம் பேரிட்சை பழத்தில் 65 மில்லி கிராம் கால்சியச்சத்து உள்ளது. இதில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது.

உலர்ந்த கருப்பு திராட்சை (ப்ளாக் கரன்ட்)

100 கிராம் ப்ளாக் கரன்ட் 60 மில்லி கிராம் கால்சியச்சத்து உள்ளது.

உலர் அத்திப்பழம்

100 கிராம் உலர் அத்திப்பழம் சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு 150 மில்லி கிராம் நீங்கள் சாப்படும் அளவைவிட அதிக அளவு கால்சியச் சத்து கிடைக்கிறது.

எனவே உங்களுக்கு தேவையான கால்சியச் சத்துக்களைப் பெறுவதற்கு இந்த பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்பவை ஆகும். உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது. இதுபோன்ற பல்வேறு தகவல்களையும் ஹெச்.டி. தமிழ் தொகுத்து வழங்குகிறது. தொடர்ந்து தகவல்களை பெறுவதற்கு எங்களுடன் இணைந்திருங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி