Vinesh Phogat: ஒலிம்பிக்:100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கப்பட்ட வினேஷ் போகத் வழக்கு: தீர்ப்பு நாளை வரை ஒத்திவைப்பு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Vinesh Phogat: ஒலிம்பிக்:100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கப்பட்ட வினேஷ் போகத் வழக்கு: தீர்ப்பு நாளை வரை ஒத்திவைப்பு

Vinesh Phogat: ஒலிம்பிக்:100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கப்பட்ட வினேஷ் போகத் வழக்கு: தீர்ப்பு நாளை வரை ஒத்திவைப்பு

Marimuthu M HT Tamil
Aug 10, 2024 10:31 PM IST

Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 50 கிலோ மல்யுத்தத்தில் 100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கப்பட்ட வினேஷ் போகத் வழக்கு மீது தீர்ப்பு நாளை வரை ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.

Vinesh Phogat: ஒலிம்பிக்:100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கப்பட்ட வினேஷ் போகத் வழக்கு: தீர்ப்பு நாளை வரை ஒத்திவைப்பு
Vinesh Phogat: ஒலிம்பிக்:100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கப்பட்ட வினேஷ் போகத் வழக்கு: தீர்ப்பு நாளை வரை ஒத்திவைப்பு (PTI)

இந்நிலையில் வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு குறித்து ஒலிம்பிக் விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தின் (சிஏஎஸ்) தற்காலிகப்பிரிவு சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) இரவு 9:30 மணிக்கு தனது தீர்ப்பை வழங்கும் எனத் தெரிவித்த நிலையில், அதன் முடிவை ஆகஸ்ட் 11ஆம் தேதியான நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான முடிவு ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் தகவல் தெரிவித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தின் பங்கு:

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஏற்படும் பிரச்னைகள் மற்றும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண குறிப்பாக விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தின் தற்காலிகப் பிரிவு அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மல்யுத்த இறுதிப்போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்காவின் சாரா ஆன் ஹில்டெபிராண்டுக்கு எதிராக 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவின் வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தற்காலிக நடுவர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

உலக மல்யுத்தத்தின் தாய் அமைப்பான யுனைடெட் வேர்ல்ட் ரெஸ்லிங் (யு.டபிள்யூ.டபிள்யூ), விளையாட்டு விதிகளின்படி வினேஷ் ஆடுவதற்கான தகுதியை 100 கிராம் எடை அதிகரிப்பின் காரணமாக பறித்தது.

"மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மனுவுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும்’’: இந்திய ஒலிம்பிக் சங்கம்:

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மனுவுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் ஆறாம் தேதி நடைபெற்ற, அரையிறுதியில் வினேஷுக்கு பதிலாக கியூபா வீராங்கனை யுஸ்னெலிஸ் குஸ்மான் லோபஸ் சேர்க்கப்பட்டார்.

ஆகஸ்ட் ஆறாம் தேதி நடைபெற்ற போட்டியின்போது நிர்ணயிக்கப்பட்ட எடை வரம்புக்குள் கியூப வீராங்கனை லோபஸ் இருந்ததால், அவருடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தனது மேல்முறையீட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வினேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, விதுஷ்பத் சிங்கானியா ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கு விசாரணை யார் யாரிடமெல்லாம் நடக்கிறது:

இந்த வழக்கு விசாரணையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீதிபதி டாக்டர் அன்னாபெல் பென்னட் விசாரிக்கிறார். குறிப்பாக வினேஷ் போகத் மற்றும் யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் இந்தியன் ஒலிம்பிக் சங்கம் ஆகிய சங்கத்தினரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விசாரணைக்கு முன்னர் தங்கள் விரிவான சட்ட சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்யவும், பின்னர் வாய்வழி வாதங்களை முன்வைக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

விசாரணையின் போது உதவிய சால்வே மற்றும் சிங்கானியா மற்றும் கிரிடா சட்டக் குழுவினருக்கு அமைப்பின் தலைவர் பி.டி.உஷா நன்றி தெரிவித்தார்.

வினேஷை ஆதரிப்பது தனது கடமை என்று இந்தியன் ஒலிம்பிக் சங்கம் கருதுகிறது. இந்த விஷயத்தில் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புவதாக இந்தியன் ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது.

ஒலிம்பிக் இறுதிநாளில் தீர்ப்பு:

முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகள் நாளை முடிவதற்குள் வினேஷ் போகத்தை ஒரு முடிவை எதிர்பார்க்கலாம் என்று பாரிஸ் ஒலிம்பிக்கின் விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தின் தற்காலிகப் பிரிவு கூறியது.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர தனக்கு வலிமை இல்லை என்றும் கூறினார்.

தற்போதைய நிலைமை குறித்து பதிலளித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) தலைவர் தாமஸ் பாக் ஆகஸ்ட் 9ஆம் தேதி கூறுகையில், வினேஷுக்கு ஒரு "குறிப்பிட்ட புரிதல்" இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான முடிவு ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் தகவல் தெரிவித்துள்ளது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.