தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : உங்கள் வீட்டு இளவரனுக்கு பெயர் வைக்கவேண்டுமா? தெய்வீக சிறப்புகள் வாய்ந்த பெயர்கள் இதோ!

Boy Baby Names : உங்கள் வீட்டு இளவரனுக்கு பெயர் வைக்கவேண்டுமா? தெய்வீக சிறப்புகள் வாய்ந்த பெயர்கள் இதோ!

Priyadarshini R HT Tamil

Aug 16, 2024, 12:02 PM IST

google News
Boy Baby Names : உங்கள் வீட்டு இளவரனுக்கு பெயர் வைக்கவேண்டுமா? எனில் தெய்வீக சிறப்புகள் வாய்ந்த பெயர்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
Boy Baby Names : உங்கள் வீட்டு இளவரனுக்கு பெயர் வைக்கவேண்டுமா? எனில் தெய்வீக சிறப்புகள் வாய்ந்த பெயர்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

Boy Baby Names : உங்கள் வீட்டு இளவரனுக்கு பெயர் வைக்கவேண்டுமா? எனில் தெய்வீக சிறப்புகள் வாய்ந்த பெயர்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

தெய்வீக சிறப்புகள் வாய்ந்த குணப்படுத்தும் திறன்கொண்ட பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதை உங்கள் செல்ல மகனுக்கு வைத்து மகிழுங்கள்.

தெய்வீக சிகிச்சை என்ற அர்த்தத்தில் வரும் பெயர்கள்

இந்து பாரம்பரியத்தில் பெயர்கள் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். பெயர்கள், மீள்வு, தூய்மை, நன்மை, ஆன்முக நலன் போன்ற அர்த்தங்களை வெளிப்படுத்துவதாக வைப்பது இந்துக்களின் பாரம்பரியம். உங்களின் செல்ல மகன்களுக்கு வைப்பதற்கு இங்கு சில பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து உங்கள் வீட்டு இளவரசர்களை ராஜாவாக்குங்கள்.

ஹரித்

ஹரித் என்றால் பசுமை மற்றும் புத்துணர்வு என்று பொருள். இது ஆரோக்கியம், உலகின் இயற்கை வளம் மற்றும் பசுமையுடன் தொடர்புடையது. ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மூலிகை தாவரங்களுடன் தொடர்புடையது. இந்தப் பெயர் புத்துணர்ச்சி மற்றும் இயற்கையின் வழியான நலன் மற்றும் புத்துயிர் பெறுதல் என்பதை இந்தப் பெயர் உணர்த்துகிறது.

ஆரோஹான்

ஆரோஹான் என்றால், எழுச்சி அல்லது மேலெழுதல் அல்லது முன்னேறுதல் என்று பொருள். இது ஆன்மீக வளர்ச்சி மற்றும் உயரத்தை குறிக்கிறது. இந்தப்பெயர், ஆன்மீக ரீதியாகச் சென்று மீள்வது என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

ஆன்மீக அறிவு என்ற அர்த்தத்தையும் கொடுக்கும். உடல் ரீதியான மற்றும் மன ரீதியான எழுச்சியைக் குறிக்கிறது. தெய்வீக கருணையால் உள்ளார்ந்த வலுவையும் கொடுக்கிறது. இத்தனை நேர்மறை எண்ணங்கள் நிறைந்த இந்தப் பெயரை உங்கள் குழந்தைக்கு வைத்தால் அவர்களின் எதிர்காலம் சிறக்கும்.

ஆயுஷ்மான்

ஆயுஷ்மான், நீண்ட ஆயுளைக் கொண்டவர், நீண்ட நாட்கள் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று பொருள். இந்தப்பெயர், நீண்ட காலம் வாழவேண்டும் என்பதன் அடிப்படையில் வைக்கப்படுகிறது. இவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன், சமமான வாழ்க்கை முறையை கடைவேண்டும் என்பது இதன் அர்த்தம் ஆகும்.

ருத்ராஜா

ருத்ராஜா என்றால் சிவனின் கடவுள் என்று பொருள். சிவன் என்றால், சிறந்த ஆற்றுப்படுத்துபவர் என்று பொருள். அழிவு மற்றும் மீளுருவாக்கம் என்பதும் இதன் அர்த்தம். தெய்வீக சக்தி என்பது இந்தப் பெயருக்கு அர்த்தம். நீங்கள் மீளுருவாக்கம் செய்யும்போது, உங்களால் மீள முடியும் என்பதைக் குறிக்கிறது.

ஆரோக்கியா

ஆரோக்கியா என்றால் ஆரோக்கியம் மற்றும் நோய் நொடி இல்லாதவர் என்று பொருள். இந்தப்பெயர் முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அடைய கடவுளின் சக்தி என்று பொருள். வாழ்க்கையில் சமநிலையை பேண ஆயுர்வேதத்தின் கொள்கைகள் உதவுவதுபோல், இந்தப் பெயரை உங்கள் குழந்தைக்கு சூட்டும்போது அது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.

திவ்யபிரகாஷ்

திவ்யபிரகாஷ் என்றால் தெய்வீக ஒளி என்று பொருள் அல்லது சொர்கத்தின் வெளிச்சம் என்று பொருள். வழிகாட்டும் மற்றும் ஆற்றுப்படுத்தும் தெய்வீக ஆற்றல் ஒளியின் சக்தி என்பது இதன் அர்த்தமாகும். இருளைப் போக்கும் உள்ளொளி என்பதை இது காட்டுகிறது. இது உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

சஞ்ஜீவன்

சஞ்ஜீவன் என்றால், வாழ்க்கை கொடுப்பவர் என்று பொருள். புத்துயிர் என்பதும் இதன் அர்த்தமாகும். வாழ்க்கை மீளுருவாகும் ஆற்றல் நிறைந்தது என்பதை இந்தப்பெயர் பிரதிபலிக்கிறது. ஆரோக்கியம், ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு அங்கம், அது உடல் மற்றும் மனம் புத்துயிர் பெறுவது மற்றும் மீள்வது இதன் அர்த்தமாகும். இந்த பெயரை வைக்கும் குழந்தை ஆரோக்கியம் நிறைந்தவர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இது ராமனின் தூதன் ஆஞ்சநேயரின் பெயர்.

யோகேஷ்

யோகேஷ் என்றால், யோகாவின் கடவுள் என்று பொருள். யோகா என்றால் ஆயுர்வேத மருத்துவத்துடன் தொடர்புடையது. ஒட்டுமொத்த உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தை குறிக்கிறது. இந்தப் பெயர், தொடர்ந்து யோகா பயிற்சி பெற்றலால், உடல், மன மற்றும் ஆன்மீக சிகிச்சைக்கு வழிவகுக்கும்.

டிராவ்யா

டிராவ்யா என்றால் மருத்துவ உட்பொருள் மற்றும் உட்பொருள் என்று பொருள். ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும் மருந்துபொருட்கள், உடல் குணமடைய உதவும் பொருட்கள் என்று பொருள். இந்தப்பெயர், மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்த பெயரே ஆரோக்கியம் மற்றும் குணமடைதல் என்ற பொருளை தரும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை