Wangari Maathai : பூமிக்கு பசுமைப்போர்வை போர்த்திய வன தேவதை வங்காரி மாத்தாய் பிறந்த தினம் இன்று!
Wangari Maathai : இவர் நடத்திய பசுமை பட்டை இயக்கம், அது ஏற்படுத்திய மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அவர் செய்த நன்மை என்ன என்று பார்க்கலாம்.
மகளிர் மாதம் மற்றும் வன தினம் ஆகியவற்றை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் நாம் வனத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுற்றுச்சூழல் பெண்ணிய போராளி வங்காரி மாத்தாய் குறித்து தெரிந்துகொள்ளலாம். இன்று அவரது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின்றி வேறு எவராலும் இந்த பூமியை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த இந்த வனப்பேச்சியின் கதையை அவரது பிறந்த நாளில் தெரிந்துகொள்ளலாம்.
இவர் நடத்திய பசுமை பட்டை இயக்கம், அது ஏற்படுத்திய மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அவர் செய்த நன்மை என்ன என்று பார்க்கலாம்.
ஆப்ரிக்காவின் கென்யா நாட்டில் உள்ள நியேரியில் 1940ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பிறந்தவர் வாங்காரி முட்டா மாத்தாய். வனங்களின் தாய். மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலே முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்.
உயிரியியல் அறிவியல் துறையில் கன்சாசில் உள்ள கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள். பிட்டஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலையும், ஜெர்மனியின் நைரோபி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
அங்குதான் அவர் விலங்குகளின் உடற்கூறியல் கற்றுக்கொடுக்கும் பேராசிரியராகவும் இருந்தார். பின்னர் அந்தத்துறையின் தலைவராகவும், அசோசியேட் பேராசிரியராகவும் ஆனார். அந்தப்பகுதிகளிலேயே இவ்விரு பதவிகளையும் பெற்ற முதல் பெண் இவர்தான்.
மரம் நடும் யோசனையை இவர் தேசிய பெண்கள் கவுன்சிலில் இருந்து பணியாற்றும்போது இவர் அறிமுகப்படுத்தினார். அவர் அந்த யோசனையை பரலாக்க வேண்டும் என்றும், அடிமட்ட மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பெண்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தவும் பெண்கள் குழுக்களின் உதவியுடன், மரங்களை நடுவதில் அவர் அதிக கவனம் செலுத்தினார். பச்சைப்பட்டை இயக்கத்தின் மூலம், அவர் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மரங்களை பெண்களின் உதவியுடன், பள்ளிகள், காடுகள் மற்றும் சர்ச் காம்பவுண்டுகளில் நட்டார்.
1986ம் ஆண்டு ஆப்பிரிக்கா முழுவதிலும் 40 பேரை இவர்களை தொடர்புகொள்ள வைத்தது. அவர்களும் தங்கள் நாடுகளில் இதுபோன்ற மரம் நடும் திட்டங்களை துவக்கினார்கள். தான்சான்யா, உகாண்டா, மலாவி, லெசோதோ, எத்தியோபியா, ஜிம்பாவே உள்ளிட்ட பல நாடுகள் இதுபோன்ற முன்னெடுப்புகளை வெற்றிகரமாக செய்துள்ளன.
நில அபகரிப்புக்கு எதிரான இவரது பிரச்சாரம், ஜனநாயகம், மனித உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான இவரது போராட்டங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெண்கள் வளர்ச்சி, பெண் கல்விக்காக பாடுபட்டவர், நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று, கென்யாவின் சுற்றுச்சூழல் அமைச்சரானார்.
இவரது சுற்றுச்சூழல் சேவையை பாராட்டி, அதை அங்கீகரிக்கும் வகையில் இவருக்கு நோபல் அமைதி பரிசும் வழங்கப்பட்டது. நோபல் அமைதிப்பரிசை வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்ணும் இவர்தான்.
இவர் 2011ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி இறந்தார். பல்வேறு போராட்டங்கள் நிறைந்த இந்த வனமங்கையின் வாழ்வை இந்த வன நாளில் ஹெச்டி தமிழ் நினைவுகூறுகிறது.
மாத்தாய் போல் பல்வேறு சாதனைப் பெண்களை இந்த உலகம் கண்டுள்ளது. எனினும், இவரது சாதனைகள் குறிப்பிடத்தக்கவை, மேலும் இவையனைத்தும் பெண்களுக்கு உத்வேகமாக அமையக்கூடியவை. இவர் குறித்து தெரிந்துகொள்வது மேலும் பல பெண்களை உற்சாகப்படுத்தி, சாதிக்க வைக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்