Health Benefits of Sunflower Seeds : ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் சூரியகாந்தி விதைகள்! தினம் சாப்பிட பலன் பல கிட்டும்!-health benefits of sunflower seeds sunflower seeds that bring health benefits there are many benefits to eat every day - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Benefits Of Sunflower Seeds : ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் சூரியகாந்தி விதைகள்! தினம் சாப்பிட பலன் பல கிட்டும்!

Health Benefits of Sunflower Seeds : ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் சூரியகாந்தி விதைகள்! தினம் சாப்பிட பலன் பல கிட்டும்!

Priyadarshini R HT Tamil
Aug 03, 2024 11:12 AM IST

Health Benefits of Sunflower Seeds : ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் சூரியகாந்தி விதைகளை தினம் சாப்பிட பலன் பல கிடைக்கும்.

Health Benefits of Sunflower Seeds : ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் சூரியகாந்தி விதைகள்! தினம் சாப்பிட பலன் பல கிட்டும்!
Health Benefits of Sunflower Seeds : ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் சூரியகாந்தி விதைகள்! தினம் சாப்பிட பலன் பல கிட்டும்!

விதைகள் வெண்நிறமாக உள்ளன. சுவையானதாகவும் உள்ளன. ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. நீங்கள் விதைகளை அப்படியே சாப்பிடலாம். வறுத்தும், வேறு உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.

ஆரோக்கிய நன்மைகள்

சூரியகாந்தி விதைகளை நாம் உட்கொள்ளும்போது, அது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

சூரியகாந்தி விதையின் நன்மைகள்

வீக்கத்தை குறைக்கிறது

நாள்பட்ட வீக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு, சூரியகாந்தி விதைகளின் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உதவுகின்றன. சூரியகாந்தி விதையில் வைட்டமின் இ, ஃப்ளாவனாய்ட்கள் மற்றும் மற்ற தாவர உட்பொருட்கள உள்ளன. இது வீக்கத்தை குறைக்கிறது. 

வாரத்தில் ஒருமுறை சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவது, மற்ற விதைகளை வாரத்தில் 5 முறை சாப்பிடுவதற்கு இணையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது உடலில் உள்ள நாள்பட்ட வீக்கத்தை குறைக்கிறது. மேலும், நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்துக்களையும் குறைக்கிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் உள்ளது. இதில் உள்ள பாலிஅன்சாச்சுரேடட் கொழுப்புகள் மற்றும் மேனோஅன்சாச்சுரேடட் கொழுப்புகள் இரண்டும் உள்ளது.

முக்கால் கப் சூரியகாந்தி விதையில் 14 கிராம் கொழுப்பு உள்ளது. விதைகள், குறிப்பாக சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவதால், உங்களுக்கு இதய நோய் ஏற்படும் ஆபத்து, அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம் என அனைத்தும் குறைகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வலு சேர்க்கிறது

சூரியகாந்தி விதையில் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. அது உங்கள் உடல் வைரஸ்களை எதிர்த்து போராட உதவுகிறது. 

இதில் சிங்க் மற்றும் செலனியம் உள்ளது. சிங்க், நோய் எதிர்ப்பு மண்டலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் நோய் எதிர்ப்பு செல்களை அதிகரித்து பராமரிக்க உதவுகிறது. செலனியமும் வீக்கத்தை குறைக்க, தொற்றை எதிர்த்து போராட மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது

சூரியகாந்தி விதையில் உள்ள புரதச்சத்துக்கள், உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்கிறது. வைட்டமின் பி, செலனியம் போன்ற மற்ற ஊட்டச்சத்துக்கள், உங்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. 

இதில் உள்ள வைட்டமின் பி1(தியாமின்) உங்கள் உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. அது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. செலனியம் உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் உடலுக்கு அதிக ஆக்ஸிஜனைக் கொடுக்கிறது.

சூரியகாந்தி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

சூரியகாந்தி விதையில் உயர் புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்களுக்கு கடுமையான உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

சூரியகாந்தி விதையில் வைட்டமின் இ, பி1, பி6, இரும்புச்சத்துக்கள், காப்பர், செலனியம், மாங்கனீஸ், சிங்க் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.

கால்கப் வறுத்த சூரியகாந்தி விதையில் 207 கலோரிகள், 5.8 கிராம் புரதம், 19 கிராம் கொழுப்பு, 7 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 3.9 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது.

எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்டது என்றாலும், அதிக கலோரிகள் நிறைந்ததால், இதை கால் கப் மட்டுமே ஒரு நேரத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். உப்பு சேர்க்கப்படாத சூரியகாந்தி விதைகளை அளவாக எடுப்பது உடலுக்கு நல்லது.

இதை நீங்கள் சாலட்டில் தூவி சாப்பிடலாம். சீட்ஸ் லட்டு செய்து சாப்பிடலாம். ஓட்ஸில் சேர்த்து சாப்பிடலாம். காய்கறிகளில் கலந்து சாப்பிடலாம். 

பேக்கிங் உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். பர்கரில் சேர்த்து சாப்பிடலாம். பீநட் பட்டருக்கு பதில் சன்ஃபளார் நட் பட்டர் செய்து சாப்பிடலாம். மற்ற எண்ணெய்களுக்கு பதில் சூரியகாந்தி எண்ணெயை உணவில் பயன்படுத்தலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.