தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Black Urad Dal : எலும்பை இரும்பாக்கும் கருப்பு உளுந்து கஞ்சி.. நாகர் கோவில் ஸ்டைலில் செய்வது எப்படி என்று பாருங்க..

Black Urad Dal : எலும்பை இரும்பாக்கும் கருப்பு உளுந்து கஞ்சி.. நாகர் கோவில் ஸ்டைலில் செய்வது எப்படி என்று பாருங்க..

Sep 19, 2024, 02:45 PM IST

google News
Black Urad Dal Recipe : மாதவிடாய் வரும் பெண்களுக்கு கருப்பு உளுந்தை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. உளுந்து வடை, உளுந்து உருண்டை, உளுந்து சோறு என ஏதோ ஒரு வகையில் உளுந்தை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. இங்கு நாகர் கோவில் ஸ்டைலில் ருசியான உளுந்து கஞ்சி செய்வது எப்படி என பார்க்கலாம்
Black Urad Dal Recipe : மாதவிடாய் வரும் பெண்களுக்கு கருப்பு உளுந்தை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. உளுந்து வடை, உளுந்து உருண்டை, உளுந்து சோறு என ஏதோ ஒரு வகையில் உளுந்தை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. இங்கு நாகர் கோவில் ஸ்டைலில் ருசியான உளுந்து கஞ்சி செய்வது எப்படி என பார்க்கலாம்

Black Urad Dal Recipe : மாதவிடாய் வரும் பெண்களுக்கு கருப்பு உளுந்தை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. உளுந்து வடை, உளுந்து உருண்டை, உளுந்து சோறு என ஏதோ ஒரு வகையில் உளுந்தை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. இங்கு நாகர் கோவில் ஸ்டைலில் ருசியான உளுந்து கஞ்சி செய்வது எப்படி என பார்க்கலாம்

Black Urad Dal Recipe : கருப்பு உளுந்தம்பருப்பு சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கருப்பு உளுந்தில் புரதம் நிறைந்துள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் சைவ உணவு உண்பவர்களுக்கு அதிக அளவில் புரதம் கிடைக்கும். உளுந்தம் பருப்பில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, தாமிரம், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. இது உடலுக்கும் மிகவும் அத்தியாவசியமான சத்துக்கள் ஆகும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும் மேலும் ஆஸ்துமா மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பருப்பை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. எலும்புகளுக்கு வலுவூட்டும் ஆற்றல் பெற்றது உளுந்தம்பருப்பு. புதிதாக மாதவிடாய் வரும் பெண்களுக்கு கருப்பு உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. உளுந்து வடை, உளுந்து உருண்டை, உளுந்து சோறு என ஏதோ ஒரு வகையில் உளுந்தை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. இங்கு நாகர் கோவில் ஸ்டைலில் ருசியான உளுந்து கஞ்சி செய்வது எப்படி என பார்க்கலாம்

கருப்பு உளுந்து கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து - ½ கப்

அரிசி - 1 கப்

பூண்டு - 10 பல்

உப்பு- தேவையான அளவு

சீரகம் - 1 ஸ்பூன்

மிளகு - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1 ஸ்பூன்

சுக்கு - சிறிய துண்டு

தேங்காய் துருவல் - ½ கப்

கருப்பு உளுந்து கஞ்சி செய்முறை

கருப்பு உளுந்து மற்றும் அரிசியை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து கொள்ள வேண்டும். 6 முதல் 7 கப் வரை தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். அதில் அரிசி பருப்பு வேகும்போதே மிளகு, சீரகம், சுக்கு, பூண்டு அனைத்தையும் ஒன்றிரண்டாக தட்டி சேர்த்து கொள்ள வேண்டும். குக்கரில் வைத்தால் 6 முதல் 7 விசில் வரை வைத்து எடுத்து கொள்ளலாம். அரிசி பருப்பு வெந்த பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்தால் ருசியான கருப்பு உளுந்து கஞ்சி ரெடி. இந்த கஞ்சியுடன் ஊறுகாய் அல்லது பருப்பு துவையல் சேர்த்து சாப்பிட ருசி அருமையாக இருக்கும். இதனுடன் மட்டன் சிக்கன் சுக்கா வைத்து சாப்பிடவும் ருசி அருமையாக இருக்கும்.

குழந்தைகளுக்கு குடுத்தால் இந்த கஞ்சியில் கொஞ்சமாக சர்க்கரை கூட சேர்த்து கொடுக்கலாம். இனிப்பு சேர்த்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

கருப்பு உளுந்தின் நன்மைகள்

சர்க்கரை நோயாளிகள் கருப்பு உளுந்தை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முறையாக பராமரிக்கப்படும்.

கருப்பு உளுந்து சருமத்துக்கு நல்லது.

கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும்.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.

செரிமானத்துக்கு நல்லது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்குகிறது.

உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.

எலும்புகளை வலுவாக்குகிறது.

மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளை தடுக்கிறது.

உடலில் இரும்புச்சத்தை அதிகப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நல்லது.

உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி