How to Eat Almonds : ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தான்! ஆனால் பாதாமை இப்படி சாப்பிட்டால் கூடுதல் நன்மை கிட்டும்!
How to Eat Almonds : ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தான், ஆனால் பாதாமை இப்படி சாப்பிட்டால் கூடுதல் நன்மை கிட்டும் என்று கூறப்படுகிறது.

How to Eat Almonds : ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தான்! ஆனால் பாதாமை இப்படி சாப்பிட்டால் கூடுதல் நன்மை கிட்டும்!
பாதாமை ஊட்டச்சத்து நிறைந்ததாக்கும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
பாதாமை தினமும் உட்கொள்வது உங்கள் உடலுக்கு நன்மை தருமா?
பாதாம்கள் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். எனினும், அதை நீங்கள் அளவாக எடுத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் பாதாமின் அளவைப் பொறுத்து உங்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா என்பது முடிவாகும்.
பாதாமை உட்கொள்ளும் நேரம் எப்போது?
பாதாமை நாம் காலையில் உட்கொள்ள வேண்டும். அது அந்த நாள் முழுவதுக்குமான ஆற்றலை உங்களுக்கு கொடுக்கும். இந்த பாதாமை காலையில் சாப்பிடுவது நல்லது. பாதாமை ஸ்மூத்தி, ஓட்ஸ், பருப்புகளில் கலந்து சாப்பிடலாம். இதை தனியாகவும் சாப்பிடலாம்.