தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கருப்பு உளுந்து லட்டு; பெண்களின் மாதவிடாய் முதல் ஆண்களுக்கு விந்தணுக்கள் ஆரோக்கியம் வரை தரும்!

கருப்பு உளுந்து லட்டு; பெண்களின் மாதவிடாய் முதல் ஆண்களுக்கு விந்தணுக்கள் ஆரோக்கியம் வரை தரும்!

Priyadarshini R HT Tamil

Oct 20, 2024, 07:00 AM IST

google News
கருப்பு உளுந்து லட்டு, பெண்களின் மாதவிடாய் முதல் ஆண்களுக்கு விந்தணுக்கள் ஆரோக்கியம் வரை எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும். எப்படி சாப்பிடவேண்டும் என்று பாருங்கள்.
கருப்பு உளுந்து லட்டு, பெண்களின் மாதவிடாய் முதல் ஆண்களுக்கு விந்தணுக்கள் ஆரோக்கியம் வரை எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும். எப்படி சாப்பிடவேண்டும் என்று பாருங்கள்.

கருப்பு உளுந்து லட்டு, பெண்களின் மாதவிடாய் முதல் ஆண்களுக்கு விந்தணுக்கள் ஆரோக்கியம் வரை எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும். எப்படி சாப்பிடவேண்டும் என்று பாருங்கள்.

கருப்பு உளுந்தில் லட்டு செய்து சாப்பிடுவது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. கருப்பு உளுந்து என்றாலே அதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளது. இதனால் கருப்பு உளுந்தை அனைவரும் பரவலாக உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். கருப்பு உளுந்தின் ஆரோக்கிய நன்மைகள் தெரிந்தவுடன், இதை அனைவரும் அன்றாட உணவில் தோலை நீக்காமல் பயன்படுத்தி வருகிறார்கள். இட்லி, தோசைக்கு அரைக்கும் மாவுகளைக் கூட கருப்பு உளுந்தில் அரைத்து கருப்பு உளுந்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பெறுகிறார்கள். எண்ணற்ற வழிகளில் கருப்பு உளுந்தை உணவில் சேர்த்துக்கொள்ள அவர்கள் முனையும்போது இதுபோன்ற ரெசிபிக்கள் அவர்களுக்கு உதவும். கருப்பு உளுந்தை அந்தக்காலத்தில் தோல் நீக்காமல்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இடைக்காலத்தில்தான் அதை தோல் நீக்கி உண்ணும் பழக்கம் வந்தது. ஆனால் உளுந்தை தோலுடன் எடுத்துக்கொள்ளும்போதுதான் அது எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கருப்பு உளுந்தில் லட்டு செய்வது எப்படி என்று பாருங்கள். இந்த கருப்பு உளுந்து லட்டை குறிப்பாக வளரிளம் பெண்களுக்கு அதிகம் செய்து கொடுக்கவேண்டும். அவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை கருப்பு உளுந்து லட்டுக்கள் கொடுக்கிறது. எனவே இனிமேல் இதுபோன்ற லட்டுக்களை செய்து கருப்பு உளுந்தை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – ஒரு கப்

பொட்டுக்கடலை – ஒரு கப்

வெல்லம் – ஒரு கப்

நெய் – தேவையான அளவு

செய்முறை

கருப்பு உளுந்தை கடாயில் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து பொட்டுக்கடலையையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். இதையும் பொடித்து ஏற்கனவே பொடித்து வைத்துள்ள உளுந்து பொடியில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

வெல்லத்தையும் பொடித்து இந்த கலவையில் சேர்த்து கைகளால் நன்றாக கலந்துவிட்டு, மீண்டும் ஒருமுறை மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் நெய் சேர்த்து சூடாக்கிக்கொள்ளவேண்டும். சூடான நெய்யை இந்த மாவில் சேர்த்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். லட்டுக்கள் உடைந்துவிடாமல் இருக்கவேண்டும். அந்தளவுக்கு உருட்டி பிடித்துக்கொள்ளவேண்டும்.

இந்த உருண்டையில் பால் அல்லது தண்ணீர் சேர்த்தால், நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள முடியாது. எனவே அவற்றை தவிர்க்கவேண்டும். இளஞ்சூட்டில் உள்ள நெய்யை மட்டுமே சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

கருப்பு உளுந்தின் நன்மைகள்

சர்க்கரை நோயாளிகள் கருப்பு உளுந்தை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முறையாக பராமரிக்கப்படும்.

கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது.

கருப்பு உளுந்து சருமத்துக்கு நல்லது.

கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும்.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.

செரிமானத்துக்கு நல்லது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

மலச்சிக்கலுக்கு நல்லது. வயிற்றுப்போக்கை எதிர்த்து போராட உதவுகிறது.

உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்குகிறது.

உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.

எலும்புகளை வலுவாக்குகிறது.

மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளை தடுக்கிறது.

உடலில் இரும்புச்சத்தை அதிகப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நல்லது.

உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.

இதுபோன்ற பல்வேறு வித்யாசமான மற்றும் ஆரோக்கியமான ரெசிபிக்களை தினமும் ஹெச்.டி தமிழ் உங்களுக்கு தொகுத்து வழங்கிவருகிறது. எனவே இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள். ஆரோக்கிய வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை