தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பிரியாணி பிரியர்களே இந்த ஒரு மசாலாப் பொடி மட்டும் போதும்! தினம் தினம் சாப்பிடலாம்!

பிரியாணி பிரியர்களே இந்த ஒரு மசாலாப் பொடி மட்டும் போதும்! தினம் தினம் சாப்பிடலாம்!

Priyadarshini R HT Tamil

Nov 17, 2024, 02:39 PM IST

google News
பிரியாணி மசாலாப்பொடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பிரியாணி மசாலாப்பொடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பிரியாணி மசாலாப்பொடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பிரியாணி, இது தெற்காசியாவின் புகழ்பெற்ற உணவாகும். தற்போது கணக்கெடுப்பு நடத்தினாலும் பிரியாணி பிடிக்காதவர்களே நாட்டில் இல்லை எனும் அளவுக்கு பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை இருக்கும். அந்தளவுக்கு பிரபலமான உணவு. பிரியாணியை கறி, மீன், சிக்கன், பன்றிக்கறி, இறால் என அனைத்து வகைகளிலும் செய்யலாம். அதுவே சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு பன்னீர், காய்கறிகள், காளான், முட்டை என வகைகள் உள்ளது. இது மட்டுமின்றி பச்சை பட்டாணி, டபுள் பீன்ஸ், பட்டர் பீன்ஸ், சோயாவைப் பயன்படுத்தியும் பிரியாணி தயாரிக்க முடியும். பீட்ரூட் பிரியாணி, உருளைக்கிழங்கு பிரியாணியுடம் செய்யலாம். எனவே பிரியாணி சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டால் அசைவம் அல்லது சைவம் என இரண்டு வகைகளிலும் செய்து சாப்பிடலாம். தெற்காசியாவின் மிக பிரபலமான உணவான பிரியாணி உள்ளது. இது முஸ்லிம்களுடன் தொடர்புடைய உணவாக இருப்பதால், பாய் வீட்டு பிரியாணிக்கு மவுசு அதிகம். இந்தியாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் பிரியாணி அதிகம் இடம்பெறுகிறது. பிரியாணிக்கு என்றே குறிப்பிட்ட சில கடைகளும் உள்ளன. அதில் பிரியாணி சாப்பிட மக்கள் கூட்டமும் அலைமோதும். இவைகளால் இந்தியாவின் பிரபல உணவாக பிரியாணி உள்ளது. இந்த பிரியாணியின் சுவையை அதிகரிப்பதே அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான்.

நீங்கள் பிரியாணி பிரியர்கள் என்றால் அடிக்கடி பிரியாணி செய்வீர்கள் என்றால், இந்த ஸ்பெஷல் பிரியாணி மசாலாவை செய்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது பிரியாணிகள் மற்றும் கிரேவிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பிரியாணி மசாலா அசைவம் மற்றும் சைவம் என எந்த பிரியாணிக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த மசாலாக்களுக்கு தேர்ந்தெடுக்கும் பொருட்களை நல்ல தரமானதாக தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் பிரியாணி மசாலா நன்றாக இருக்கும். பிரியாணியின் சுவையும் நன்றாக இருக்கும்.

ஸ்பெஷல் பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்

பிரியாணி இலை – 10

பட்டை – 2

ஸ்டார் சோம்பு – 3

ஜாவித்திரி – 2

ஜாதிக்காய் – 2

கிராம்பு – 2 டேபிள் ஸ்பூன்

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

வரமல்லி விதைகள் – 4 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்

கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் – 10

கருப்பு ஏலக்காய் – 3

சிவப்பு மிளகுத் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

செய்முறை

மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் தவிர மற்ற பொருட்களையும் ஒரு கடாயில் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். இவற்றை அனைத்தையும் வறுப்பதற்கு முன்ன சுத்தம் செய்து வெயிலில் உலர்த்திக்கொள்ளவேண்டும். ஏதேனும் ஈரப்பதம் இருந்தால் அது காய்ந்துவிடும். அனைத்தையும் நல்ல மணம் வரும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.

அனைத்தையும் ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். இந்தப்பொடியை எந்த பிரியாணியிலும் சேர்த்துக்கொள்ளலாம். அசைவம் மற்றும் சைவ பிரியாணிகள், கிரேவிகள் என எதிலும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த மசாலா பிரியாணிக்கு நல்ல சுவையைத்தரும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி