Benefits of Walking : தினமும் 15 நிமிடங்கள் பவர்ஃபுல்லான நடைப்பயிற்சி! உடலுக்கு எத்தனை நன்மைகள் வரும் பாருங்கள்!
Jun 04, 2024, 11:05 AM IST
Benefits of Walking : தினமும் 15 நிமிடங்கள் பவர்ஃபுல்லான நடைப்பயிற்சி செய்வது உங்கள் உடலுக்கு எத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது பாருங்கள்.
தினமும் 15 நிமிட நடைப்பயிற்சி உங்கள் உடலில் எத்தனை நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது பாருங்கள்.
நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்
உடற்பயிற்சிகளிலே மிகவும் எளிதாக செய்யக்கூடிய பயிற்சி நடைபயிற்சிதான். இது மிகவும் சிறப்பான பயிற்சியும் கூட. நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் வேகமாக நடப்பது பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இது உங்கள் உடல் மற்றும் மனநிலையையும் மேம்படுத்துகிறது. நீங்கள் 15 நிமிடங்கள் தினமும் நடப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். இது உங்கள் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
தினமும் நடப்பது உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சிறிய நடைப்பயிற்சி கூட உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. 15 நிமிடங்கள் வேகமாக நடப்பது உங்களின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இதய நோய் ஏற்படும் வாய்ப்பை 30 சதவீதம் குறைக்கிறது.
மனநிலையை மாற்றி மன ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
நடைபயிற்சியின்போது உடலில் இருந்து எண்டோஃபின்கள் வெளியிடப்படுகிறது. இது இயற்கையாகவே உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் ஹார்மோன் ஆகும். நடைப்பயிற்சி உங்கள் மனநிலையை மாற்றும் என்றும், மனஅழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றை போக்கும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. உங்களின் மனஆரோக்கியத்தை அதிகரிக்க இது ஒரு எளிய வழி. இது உங்கள் நாளை நாள் முழுவதும் மகிழ்ச்சியாக்கும்.
சிறப்பான மூளை இயக்கம்
நடைப்பயிற்சி, மூளை இயக்கத்தை அதிகரிப்பதோடு தொடர்பு கொண்டது. வழக்கமான நடைப்பயிற்சி, நினைவாற்றலை அதிகரிக்கிறது. உங்களுக்கு நினைவிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. குறைந்தது ஒரு நாளில் 15 நிமிடங்களாவது நீங்கள் வேகமாக நடக்கவேணடும். அது உங்களின் மூளையை கூர்மையாக்குகிறது. அல்சைமர்ஸ் நோய் என்ற மறதி நோயை தடுக்க உதவுகிறது.
எடை மேலாண்மை
உங்கள் உடல் எடையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், நடைப்பயிற்சி உங்களுக்கு மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். 15 நிமிடங்கள் நீங்கள் வேகமாக நடப்பது உங்களுக்கு கலோரிகளைக் குறைக்க உதவும். உடல் எடை அதிகரிப்பை தடுக்கும். இது ஒரு சிறந்த உடற்பயிற்சி, நீங்கள் உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் இதை எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்.
ஆற்றல் அளவுகள் அதிகரிக்கும்
ஒரு சிறிய நடைப்பயிற்சி உங்களின் ஆற்றலை அதிகரிக்கும். இது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உங்கள் உடலுக்கு ஆக்ஸிஜனை தரும். உங்கள் தசைகள் மற்றும் மூளை இரண்டையும் காக்கும். உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். உங்களுக்கு சோர்வு உணர்வு ஏற்படுவதை தடுக்கும்.
தசை மற்றும் எலும்புகளை வலுவாக்கும்
நடைப்பயிற்சி, உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும். வழக்கமாக நீங்கள் நடப்பது உங்களின் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும். அது உங்களுக்கு எலும்புப்புரை நோய் ஏற்படாமல் தடுக்கும். இது தசைகள், கால்கள் மற்றும் கைகளில் உள்ள தசைகளை வலுவாக்கும்.
உறக்கத்தின் தரத்தை போக்குகிறது
உங்களுக்கு உறங்குவதில் சிரமம் இருந்தால், நடைப்பயிற்சி அதற்கு ஒரு தீர்வாகும். நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்ல உறக்கத்தைக் கொடுக்கிறது. தினமும் 15 நிமிடங்கள் நீங்கள் வேகமாக நடப்பது தூக்கமின்மை வியாதிக்கு மருந்தாகிறது.
மனஅழுத்தத்தை குறைக்கிறது
மனஅழுத்தத்தை குறைக்க நடைப்பயிற்சி மிகச்சிறந்த வழியாகும். நடைப்பயிற்சி உக்ஙள் மனதை தெளிவாக்குகிறது. மேலும் புத்தம் புது காற்றை நீங்கள் சுவாசிக்க உதவுகிறது. நடைப்பயிற்சி உங்கள் உடலில் கார்டிசால் அளவைக் குறைக்கிறது. கார்டிசால்தான் மனஅழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோன் ஆகும். தினமும் நீங்கள் நடைப்பயிற்சி செய்வது உங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது.
வாழ்நாளை அதிகரிக்கிறது
நடைப்பயிற்சி, நீங்கள் நீண்ட நாட்கள் வாழ வழிவகுக்கிறது. தினமும் ஒரு 15 நிமிடங்கள் நீங்கள் நடைபயின்றால் போதும். அது உங்கள் வாழ்நாளை அதிகரிக்கிறது. தினமும் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் நடைபயிற்சி செய்வது, உங்ளின் வாழ்நாளை பல ஆண்டுகள் நீட்டிக்கிறது. உங்கள் தினசரி பழக்கவழக்கங்களில் நீங்கள் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு நல்ல பழக்கம்.
டாபிக்ஸ்