தினமும் இரவில் மஞ்சள் கலந்த பால் குடிப்பதால் இத்ததனை பலன்களா?
pixa bay
By Pandeeswari Gurusamy Jun 01, 2024
Hindustan Times Tamil
மஞ்சள்பொடி கலந்த பாலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மஞ்சள் பொடியில் குர்குமின்கள் நிறைந்துள்ளது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. குர்குமின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.
மஞ்சள் தூள் கலந்த பால், வீக்கத்தை குறைக்கும், உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கும், வலியை குறைக்கும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஒரு டம்ளர் பாலைக் காய்ச்சி அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்க்கவேண்டும். அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கருப்பட்டி சேர்த்து இரவில் உறங்கச்செல்லும் முன் பருகவேண்டும்.
pixa bay
நமது உடலுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களின் சேதத்தை போக்குவதற்கு தேவைப்படுகிறது. அவை உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. அவை செல்கள் இயங்குவதற்கு அவசியம். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, அது உங்கள் உடலில் நோய் மற்றும் தொற்றுகள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. மஞ்சள் தூளில் குர்குமின் என்ற உட்பொருள் உள்ளது. அதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. பாலும் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்டை அதிகரிக்கச் செய்கிறது.
pixa bay
வீக்கம் மற்றும் மூட்டுவலியை எதிர்த்து போராடுவதற்கு குர்குமின் உதவுகிறது. ஆர்த்ரிட்டிஸ் மற்றும் அதேபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது நன்மையளிக்கிறது. பால், எலும்பை வலுப்படுத்த உதவுகிறது. எலும்புகளில் ஏற்படும் வலியை குறைப்பதற்கு மட்டுமல்ல, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் மஞ்சள்தூள் கலந்த பால் உதவுகிறது.
pixa bay
மஞ்சள் தூள் கலந்த பால் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இது ரத்த நாளங்கள் மற்றும் நிணநீர் மண்டலத்தை சுத்திகரிக்கிறது. நச்சுக்களிடம் இருந்து விலக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
pixa bay
மஞ்சள் தூள் பாலில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது பல்வேறு செரிமான கோளாறுகளையும் சரிசெய்கிறது. வாயு, உப்புசம், நெஞ்செரிச்சல், வயிறு தொற்றுகள், அல்சர், வயிற்றுப்போக்கு என வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை மஞ்சள் தூள் கலந்த பால் பருகுவது குணப்படுத்துகிறது.
pixa bay
மஞ்சள் தூளில் உள்ள குர்குமின், புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. புற்றுநோய் செல்களை அழிக்கிறது. இது புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்கிறது. டிஎன்ஏ சேதத்தை தடுக்கிறது. புற்றுநோய் முதல் கட்டத்தில் இருந்தால், தினமும் மஞ்சள் தூள் கலந்த பாலை பருகும்போது அது புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது.
pixa bay
மஞ்சள் தூள் கலந்த பாலில் உள்ள உட்பொருட்கள் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் வலியை போக்குகிறது. மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது. ஹார்மோன்களின் சீரற்ற தன்மை, எண்டோமெட்ரியோசிஸ், லியூக்கோரா அல்லது ஃபைப்ராய்ட்கள் என அனைத்தையும் போக்குகிறது. இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்க மஞ்சள் தூள் கலந்த பால் உதவுகிறது.
pixa bay
மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. நீங்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்தால், மஞ்சள் தூள் பால் உங்களுக்கு கட்டாயம் உதவும். இதில் பட்டைப்பொடியை கலந்து பருகும்போது, அது உங்களின் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இதனுடன் நீங்கள் போதிய உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
pixa bay
குர்குமின், வயோதிகர்களின் மனநிலையை மாற்றும் தன்மை கொண்டது. வீக்கத்தை குறைப்பதன் மூலம் கடும் மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. குர்குமின் உடலில் டோப்பமைன் வெளியாகும் அளவை அதிகரிக்கிறது. டோப்பமைன் என்பது ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டர் உங்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரக்கூடிய ஹார்மோன் ஆகும்.
pixa bay
‘ஒரு நாயகன் உதயமாகிறான்’ உலகின் உன்னதாக தலைவர்கள் வெற்றியடைய பின்பற்றிய வழிகள் இவைதான்!