தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Bottle Gourd : கோடையில் இந்த ஒரு காய் மட்டும் போதும்! உடலில் தண்ணீர் சத்து குறையாது!

Benefits of Bottle Gourd : கோடையில் இந்த ஒரு காய் மட்டும் போதும்! உடலில் தண்ணீர் சத்து குறையாது!

Priyadarshini R HT Tamil

May 19, 2024, 12:47 PM IST

google News
Benefits of Bottle Gourd : கோடையில் சுரைக்காய் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
Benefits of Bottle Gourd : கோடையில் சுரைக்காய் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Bottle Gourd : கோடையில் சுரைக்காய் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

சுரைக்காயின் குளுமையை கொண்டாடுங்கள்

கோடையில் அதிகரிக்கும் வெப்பத்தை சமாளிக்க, உங்கள் உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். இயற்கையின் நற்குணங்கள் நிறைந்த சுரைக்காயை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இதன் வடிவத்தைப்பொறுத்து, ஆங்கிலத்தில் இது பாட்டில் காட் என்று அழைக்கப்படுகிறது.

இது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதுடன், கோடை காலத்தில் சிறப்பான உணவுகளை சாப்பிட முடிகிறது. இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. இந்த சுரைக்காயில் உள்ள பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீர்ச்சத்துக்கள் நிறைந்தது

சுரைக்காய் நீர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட ஒரு காய். அது உங்கள் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்வதுடன், உங்களின் தாகத்தை குறைக்கிறது. கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் உள்ள இந்த காய் உங்கள் உடலுக்கு கோடை காலத்திற்கு தேவையான தண்ணீர் சத்தை வழங்குகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு, உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலுக்கு நல்லது.

கலோரிகள் குறைவாக இருந்தாலும், உங்கள் உடலில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு ஆகிய மினரல்கள் அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் பி ஆகிய முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

உடலுக்கு செரிமானத்தைக் கொடுக்கிறது

சுரைக்காய் உடலுக்கு செரிமானத்தை அளிக்கக்கூடிய உணவுகளுள் ஒன்று. இதில் உள்ள உயர் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், உடலில் செரிமானத்தை ஏற்படுத்துகிறது. குடல் நுண்ணுயிர்களை காக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.

குளிர்ச்சியை அதிகரிக்கும்

உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடிய உணவுகளுள் சுரைக்காயும் ஒன்று. இது உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது. இது உடலில் பித்தத்தை கட்டுக்குள் வைப்பதுடன், கோடை வெப்பத்தை எதிர்த்து போராடுகிறது.

இதய ஆரோக்கியம்

சுரைக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

ரத்த அழுத்த முறைபாடு

சுரைக்காயில் உள்ள பொட்டாசியம், உடலில் சோடியத்தின் பாதிப்பை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

உடல் எடை கட்டுப்பாடு

சுரைக்காயில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. உடல் எடையை பராமரிப்பதில் உதவுகிறது. வயிறு நிறைந்த உணர்வை தருகிறது. இதனால், தேவையற்ற ஸ்னாக்ஸ் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. உடலில் கலோரிகளை குறைத்து, உடல் வளர்சிதையை பராமரிக்கிறது.

கழிவுநீக்கம்

சுரைக்காய் இயற்கை கழிவு நீக்கி, உடல் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

சுரைக்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடல் தொற்றுகள் மற்றும் நோய்ளுக்கு எதிராக போராடுவதை உறுதிசெய்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் உடல் நீர்ச்சத்தை இழக்காமல் பார்த்துக்கொள்கிறது.

இதில் இருந்து பல்வேறு உணவுகள் சமைக்கலாம்

சுரைக்காயை பயன்படுத்தி கூட்டு, பொரியல், சாம்பார் என பல்வேறு உணவுப்பொருட்களை சமைக்க முடியும் என்பதால், இது சமையலறையில் பல்வேறு பலன்களைக் கொடுக்கும் ஒரு உணவாகப் பயன்படுகிறது.

இதில் சாலட்கள் மற்றும் சாறுகளும் பச்சையாக சாப்பிட முடியும். இதன் சுவை, கோடைக்கால உணவுகளில் நீங்கள் சேர்த்துக்கொள்ள ஏற்றதாக உள்ளது. இதில் மசாலாக்களை பயன்படுத்தி சாப்பிடலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி