தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Betel Leaves : மனஅழுத்தத்தை போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்ன?

Benefits of Betel Leaves : மனஅழுத்தத்தை போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil

May 31, 2024, 01:17 PM IST

google News
Benefits of Betel Leaves : மனஅழுத்தத்தை போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
Benefits of Betel Leaves : மனஅழுத்தத்தை போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Betel Leaves : மனஅழுத்தத்தை போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

வெற்றிலையில் உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்கள்

100 கிராம் வெற்றிலையில் 1.3 மைக்ரோகிராம் அயோடின் உள்ளது. 4.6 மைக்ரோகிராம் பொட்டாசியம், 2.9 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 13 மைக்ரோகிராம் வைட்டமின் பி1, 0.89 மைக்ரோகிராம் நிக்கோடினிக் அமிலம் ஆகியவை உள்ளது.

ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கின்றன. வெற்றிலையும் அதில் ஒன்றுதான். இதில் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

இந்திய கலாச்சாரத்தில் வெற்றிலை என்பது நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் உணவு வகைகளுள் ஒன்று. இது ஒரு சிறிய இலைதான். இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இது பல மில்லியன் இந்தியர்களின், சுவை அரும்புகளையும், இதயத்தையும் கொள்ளை கொண்டது.

இந்தியாவில், திருமணங்கள் முதல் திருவிழாக்கள் வரை வெற்றிலை என்பது முக்கியமான ஒன்றாகும். இது இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தது. இது சுவை நிறைந்தது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நிறைந்தது.

ஆராய்ச்சிகளின் அடிப்படையில் 15 முதல் 20 மில்லியன் வரை இந்தியர்கள், வெற்றிலையை உட்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் 55,000 எக்டேர் வரை பயிரிடப்படுகிறது. இது 9,000 மில்லியன் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 66 சதவீதம் வரை மேற்கு வங்கத்தில் இருந்து பெறப்படுகிறது.

வெற்றிலை செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலைப்போக்குகிறது

வெற்றிலை, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது உடலில் உள்ள அமில அளவைக் குறைக்கிறது. வயிறு தொடர்பான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது மலச்சிக்கலைப்போக்க உதவுகிறது. வெற்றிலையை நசுக்கி, ஓரிரவு தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். காலையில் எழுந்தவுடன், தண்ணீரை வடித்து வெறும் வயிற்றில் பருகவேண்டும்.

பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது

வெற்றிலையில் நுண்ணுயிர்கள் அதிகம் உள்ளது. இது வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. பற்களில் மஞ்சள் கறை படிவதைத் தடுக்கிறது. பற்களில் தேய்மானம், ப்ளேக் ஏற்படுவதை தடுக்கிறது. வெற்றிலையில் தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை உணவுக்குப்பின்னர் உண்பதால், அது பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

இது பல் வலி, ஈறுகளில் வலி, வீக்கம் மற்றும் வாயில் ஏற்படும் தொற்று ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது. இது வாயில் பாக்டீரியாக்கள் வளர்வதை தடுக்கிறது. ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

செரிமான மண்டலத்துக்கு நன்மை கொடுக்கிறது

வெற்றிலை ஆயுர்வேத மருத்துவத்தில் சுவாசப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு உதவுகிறது. இருமல், வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற வியாதிகளை அது கட்டுப்படுத்துகிறது. இந்த வெற்றிலையில் உள்ள உட்பொருட்கள் சுவாசப்பாதையில் உள்ள நெரிசலைப் போக்குகிறது. சுவாசத்தை மேம்படுத்துகிறது.

மனஅழுத்தத்தைப் போக்குகிறது

வெற்றிலையை மெல்லும்போது அது மனஅழுத்தத்தில் இருந்து ஆறுதல் கொடுக்கிறது. பதற்றத்தைப் போக்குகிறது. உடல் மற்றும் மனதுக்கும் இதமளிக்கிறது. வெற்றிலையில் உள்ள குணங்கள், உடலில் கேட்சோலமைன் என்ற இயற்கை உட்பொருள் உடலில் பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. வெற்றிலையை மென்று உண்பதால், ஒட்டுமொத்த மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது

வெற்றிலையில், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அது உங்கள் தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. தலைமுடி அடர்த்தியை அதிகரிக்கிறது. வெற்றிலையை தலைமுடி மாஸ்க்காகப் பயன்படுத்தலாம். அது உங்களுக்கு நல்ல தலைமுடியைக் கொடுக்கிறது.

இத்தனை ஆரோக்கிய நன்மைகளை உணவில் சேர்த்து உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

வெற்றிலையை எடுத்துக்கொள்ளும் முறைகள்

காலையல் வெறும் வயிற்றில் மென்று உண்ணலாம்.

நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கும்போது, இதை சாப்பிடலாம். இதில் உள்ள ஃபினோலிக் உட்பொருள், உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

வெற்றிலை உங்களுக்கு மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. இதை ஓரிரவு தண்ணீரில் ஊறவிட்டு, காலையில் வடிகட்டி, அந்த தண்ணீரை மட்டும் பருகவேண்டும். இது மலச்சிக்கலைப் போக்குகிறது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி