தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Betel Leaves Rice : இதய ஆரோக்கியம் முதல் வாயுத்தொல்லை வரை போக்கும் வெற்றிலை சாதம்! இதோ ரெசிபி!

Betel Leaves Rice : இதய ஆரோக்கியம் முதல் வாயுத்தொல்லை வரை போக்கும் வெற்றிலை சாதம்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
May 28, 2024 10:08 AM IST

Betel Leaves Rice : இதய ஆரோக்கியம் முதல் வாயுத்தொல்லை வரை போக்கும் வெற்றிலை சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Betel Leaves Rice : இதய ஆரோக்கியம் முதல் வாயுத்தொல்லை வரை போக்கும் வெற்றிலை சாதம்! இதோ ரெசிபி!
Betel Leaves Rice : இதய ஆரோக்கியம் முதல் வாயுத்தொல்லை வரை போக்கும் வெற்றிலை சாதம்! இதோ ரெசிபி!

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

வெற்றிலையை நம் முன்னோர்கள் சாப்பிட்ட பின் செரிமானத்துக்குப் பயன்படுத்தும் ஒன்றாக வைத்திருந்தனர். சாப்பிட்டவுடன் நாம் வெற்றியிலைல் சுண்ணாம்பு மற்றும் பாக்கு வைத்து சாப்பிடுவது தாம்பூலம் தரிப்பது என கூறப்பட்டது. விருந்து நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் ஒன்றாக வெற்றிலை இருந்தது.

ஆனால் வெற்றிலையில் எண்ணற்ற நற்குணங்கள் உள்ளது. வெற்றிலையை குழந்தைகளுக்கு வாரத்தில் ஒருமுறை கொடுத்து வந்தால் போதும் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் பெருகும். ஆனால் சில குழந்தைகள் வெற்றிலையை விரும்பமாட்டார்கள். எனவே அவர்களுக்கு வெற்றிலையில் சாதமே செய்து கொடுக்கலாம். வெற்றிலை சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

வெற்றிலை – 4

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

கடலை பருப்பு – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

பச்சை மிளகாய் – 4

பூண்டு – 8 பல்

பெரிய வெங்காயம் – 1 நீளவாக்கில் நறுக்கியது

கடலை – ஒரு கைப்பிடியளவு

(தேவைப்பட்டால் சாதம் தயாரித்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்)

செய்முறை

சாதத்தை வடித்து தட்டில் ஆறவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் தாளிக்க வேண்டும்.

அவை பொரிந்தவுடன் கடலை சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தட்டிய பூண்டுப்பல் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானவுடன், கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிய வெற்றிலையை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

கடைசியாக வடித்த சாதத்தை சேர்த்து கிளறினால், மணமணக்கும் வெற்றிலை சாதம் சாப்பிட தயார்.

ஏதேனும் ஒரு கூட்டு அல்லது பொரியலுடன் பரிமாறலாம். அப்பளம், வடகம், ரைத்தா போன்றவையோ அல்லது துவையலோ கூட இதற்கு தொட்டுக்கொள்ள போதுமானது.

குழந்தைகளுக்கு இதை பிரண்டை துவையலுடன் கொடுத்து வந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் பெருகி, எலும்புகள் வலுப்பெறும்.

வெற்றிலையில் உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்கள்

100 கிராம் வெற்றிலையில் 1.3 மைக்ரோகிராம் அயோடின் உள்ளது. 4.6 மைக்ரோகிராம் பொட்டாசியம், 2.9 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 13 மைக்ரோகிராம் வைட்டமின் பி1, 0.89 மைக்ரோகிராம் நிக்கோடினிக் அமிலம் ஆகியவை உள்ளது.

வெற்றிலை செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலைப்போக்குகிறது.

பற்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

செரிமான மண்டலத்துக்கு நன்மை கொடுக்கிறது.

மனஅழுத்தத்தைப் போக்குகிறது.

நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.

இத்தனை ஆரோக்கிய நன்மைகளை உணவில் சேர்த்து உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்