Benefits of Yellow Watermelon: சிவப்பை காட்டிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருக்கும் மஞ்சள் தர்ப்பூசணி!
- மஞ்சள் நிறத்தில் இருக்கும் தர்ப்பூசணி பல்வேறு விதமான உடல் ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. சிவப்பு நிற தர்ப்பூசணி போல், மஞ்சள் நிற தர்ப்பூசணியில் ஒளிந்திருக்கும் சத்துக்களை பார்க்கலாம்
- மஞ்சள் நிறத்தில் இருக்கும் தர்ப்பூசணி பல்வேறு விதமான உடல் ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. சிவப்பு நிற தர்ப்பூசணி போல், மஞ்சள் நிற தர்ப்பூசணியில் ஒளிந்திருக்கும் சத்துக்களை பார்க்கலாம்
(1 / 7)
கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைக்க உதவும் பழங்களில் முக்கியமானதாக தர்ப்பூசணி உள்ளது. நீர்ச்சத்து மிக்க இந்த பழம் வழக்கமாக சிவப்பு நிறத்தில் இருப்பது தான் பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் மஞ்சள் நிறத்தில் தர்ப்பூசணி பழங்கள் கிடைக்கின்றன். இவற்றால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
(2 / 7)
சிவப்பு தர்ப்பூசணியை காட்டிலும், மஞ்சள் தர்ப்பூசணியில் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பீட்டா கரோடீன் போன்றை உள்ளன என நிபுணர்கள் கூறுகிறார்கள்
(3 / 7)
தர்பூசணியில் சிட்ருலின் என்ற ஒரு வகை பைட்டோநியூட்ரியண்ட் இடம்பிடித்துள்ளது. இதை வழக்கமாக சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிப்பது கட்டுக்குள் இருக்கும் என தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
(4 / 7)
உடல் எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு மஞ்சள் தர்ப்பூசணி நல்ல பலனை தருகிறது. இதில் சிவப்பு தர்ப்பூசணியை காட்டிலும் குறைவான கலோரியை கொண்டதாக உள்ளது
(5 / 7)
கோடை காலத்தில் வாயு அல்லது அல்சர் பிரச்னை பலருக்கு ஏற்படுவதுண்டு. எண்ணெய் மற்றும் காரமான உணவு சாப்பிடுவதால் இவ்வாறு நிகழும். வயிறு தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் மஞ்சள் தர்ப்பூசணியை சாப்பிடலாம்
(6 / 7)
மஞ்சள் தர்பூசணியை உட்கொள்வதன் மூலம் கோடையில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு தீர்வாகும். இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள்உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது
மற்ற கேலரிக்கள்