தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Exclusive : இன்சுலின் ஊசி போடுகிறீர்களா? கிட்னி பெயிலியராயிடுச்சா? - சுகரை கட்டுப்படுத்த மருத்துவர் கூறும் எளிய தீர்வு?

Exclusive : இன்சுலின் ஊசி போடுகிறீர்களா? கிட்னி பெயிலியராயிடுச்சா? - சுகரை கட்டுப்படுத்த மருத்துவர் கூறும் எளிய தீர்வு?

Priyadarshini R HT Tamil

Dec 14, 2024, 11:57 AM IST

google News
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிகள் என்னவென்று பாருங்கள்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிகள் என்னவென்று பாருங்கள்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிகள் என்னவென்று பாருங்கள்.

நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் குறித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உடல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தும் அளவை பாதிப்பது சர்க்கரை நோய் என்ற அழைக்கப்படுகிறது. குளுக்கோஸ் உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கியமான ஆதாரம் ஆகும். இந்த ஆற்றலால்தான் தசைகள் உருவாகின்றன மற்றும் திசுக்கள் வளர்கின்றன. மூளைக்கும் முக்கியமான ஒன்றாகும். இதில் வகைகள் உண்டு. அனைத்து வகையிலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதிக சர்க்கரை, கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. நாள்பட்ட சர்க்கரை வியாதிகள் டைப் 1 மற்றும் டைப் 2 என்று அழைக்கப்படுகின்றன.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

நீரிழிவு நோயின் அறிகுறிகள், ரத்தத்தில் எவ்வளவு அதிகம் சர்க்கரை உள்ளதோ அதைப்பொறுத்து மாறுபடும். அதனால் அதன் வகைகளைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றினாலும், பொதுவான அறிகுறிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளவை உள்ளன.

வழக்கத்தைவிட அதிக தாகம்

அதிக முறைகள் சிறுநீர் கழிப்பது

முயற்சியின்றி திடீரென உயிரிழப்பது

சிறுநீரில் கீட்டோன்கள் இருப்பது.

(கிடோன்கள் என்பவை சதை மற்றும் கொழுப்பின் உடைந்த பாகமாகும். இவை உடலில் தேவையான அளவு இன்சுலின் இல்லாதபோது உடைகிறது)

சோர்ந்திருத்தல்

எரிச்சல் கொள்வது மற்றும் மனநிலையில் மாற்றம்

கண்கூச்சம் மற்றும் மங்கலாகத் தெரிவது

புண்கள் மற்றும் காயங்கள் தாமதமாக குணமடைவது

தொற்றுகள் அடிக்கடி ஏற்படுவது. குறிப்பாக பற்களின் ஈறுகள், சருமம் மற்றும் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படுவது.

இவையனைத்தும் சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும்.

இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகிறீர்களா? எனில் உங்களுக்கு திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு எளிய தீர்வைக் கொடுக்கிறார். அது என்னவென்று பாருங்கள்.

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுநீரக செயலிழப்பும் சர்க்கரை நோயால் ஏற்பட்டு, மக்கள் அதிகளவில் அவதிப்பட்டு வருகிறார்கள். சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடாது, சர்க்கரை நோயின் பாதிப்புக்களும் உங்களை தாக்கக்கூடாது. சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று மருத்துவர் காமராஜ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆவாரம்பூ மற்றும் சிறு பீழை என்று அழைக்கப்படும் கூளைப்பூ, இரண்டையும் சமஅளவு எடுத்து காயவைத்துக்கொள்ளவேண்டும். இவையிரண்டையும் எடுத்து நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

செய்முறை

இந்தக்கலவையில் ஒரு ஸ்பூனை எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து ஓரிரவு ஊறவைத்துவிடவேண்டும். காலையில் அதை அப்படியே அடுப்பில் சுண்டக் அரை டம்ளர் ஆகும் அளவுக்கு காய்ச்சி, வடிகட்டி, அடுத்த நாள் காலையில் பருகவேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இதை நீங்கள் செய்யும்போது சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சிறுநீரக பாதிப்பும் இருக்காது. கட்டாயம் முயற்சி செய்து பலன்பெறுங்கள் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி