பொட்டி பொட்டியாக பணத்தை எடுத்து வரும் செவ்வாய்.. கட்டு கட்டாக அடுக்கும் ராசிகள்.. வெற்றிக்கொடி பறக்க போகுது!
Lord Mars: செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கோபத்தின் காரணமாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி அன்று கடக ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைந்தார். செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை கொடுத்து வருகிறது. புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பழைய திட்டங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். தகவல் தொடர்பு திறன்கள் உங்களுக்கு அதிகரிக்கும்.
புதிய வழிகளில் இருந்து உங்களுக்கு பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
சிம்ம ராசி
செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய திட்டங்கள் நல்ல லாபத்தை பெற்று தரும். பழைய முதலீடுகள் உங்களுக்கு தற்போது வருமானத்தை அதிகப்படுத்தி கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கக்கூடும்.
தனுசு ராசி
செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு உணர்ச்சி ரீதியான பிணைப்பை குடும்பத்தினரோடு ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றது. உறவினர்களோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் மங்கள வாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை உங்களுக்கு சீராக இருக்கும். புதிய திட்டங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணவரவு இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாழ்க்கை உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.