உங்கள் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்குகிறதா? அறிய ஆர்வமா? அதன் அறிகுறிகளைப் பாருங்கள்!
Dec 10, 2024, 06:00 AM IST
செரிமான மண்டலம் ஆரோக்கியமாக உள்ளதன் அறிகுறிகள் என்ன?
உங்கள் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்குகிறதா என்பதை ஆர்வமாக இருந்தீர்கள் என்றால் அதன் அறிகுறிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான செரிமான மண்டலம் எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஒரு ஆரோக்கியமான செரிமான மண்டலம்தான் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் கதாநாயகன் ஆகும். பெரும்பாலான மக்கள், வெளிப்புற தோற்றத்தில் கவனம் செலுத்துகிறார்கள். எடை, ஆற்றல் அளவு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், உங்களின் குடலின் ஆரோக்கியம்தான் உங்கள் உடலை பல இடங்களிலும் பாதிக்கிறது. உங்கள் குடல் நன்றாக இயங்குகிறது என்பதற்கான முக்கிய அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
சமமான ஆற்றல் அளவுகள்
செரிமான மண்டலத்துக்கும் உங்கள் ஆற்றல் அளவுக்கும் தொடர்பு உண்டு என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஏனென்றால் இரண்டும் நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும். உங்கள் செரிமான மண்டலம் நன்றாக இயங்குகினால், உங்கள் உடல் ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவை நன்றாக உறிஞ்சும். குறிப்பாக கார்போஹைட்ரேட்கள், கொழுப்புகள் மற்றும் புரதங்களை உறிஞ்சும். இவையனைத்தும் ஆற்றலாக மாறும்.
தொடர் பசி
உங்களால் உங்கள் உடலின் இயற்கை பசியை உணர முடிகிறது என்றால், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வு இல்லாமல் பசியை நன்றாக உணர முடிகிறது என்றால், அது உங்கள் கெர்லின் மற்றும் லெட்ப்டின் போன்ற செரிமான ஹார்மோன்கள் நன்றாக சுரக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். இவற்றுக்கும் அவற்றுக்கும் தொடர்பு உள்ளது.
மென்மையான குடல் இயக்கம்
மலச்சிக்கல் ஏற்பட்டால் எத்தனை சிக்கல்கள் ஏற்படும் என்பது நமக்கு தெரியும். ஆனால் குடல் இயங்குவது ஒரு ஆரோக்கியமான செரிமான மண்டலத்தின் அறிகுறியாகும் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களால் இலகுவாக மற்றும் எளிதாக தினமும் மலம் கழிக்க முடிகிறது என்றால், அதுவும் தினமும் இருமுறை முடிகிறது என்றால், உங்களின் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது என்று பொருள்.
தெளிவான சருமம், எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் இருத்தல்
உங்கள் செரிமான மண்டலம் சிறப்பான முறையில் செயல்பட்டால் உங்கள் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இதனால் உங்கள் சருமம் பொலிவு பெறும். குறிப்பிட்ட அளவு குடல் சமநிலையை எட்டச்செய்து, இதனால் உங்கள் உடல்லி கழிவு சேராமல் தடுக்கப்படுகிறது. அது உங்கள் சருமத்தின் வழியாக வெளியேற்றப்படுகிறது.
குறைவான அளவு செரிமான அசவுகர்யம்
உங்களுக்கு வயிறு உப்பியது போன்ற தோற்றம் ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்கு சாப்பிட்ட பின் வயிற்றில் வலி ஏற்பட்டாலோ அதற்கு காரணம் செரிமான மண்டலத்தில் உள்ள சமமின்மைதான். உணவு ஏற்காமை அல்லது குடல் வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. ஒரு சிறப்பான செரிமான மண்டலம் உங்களை பல்வேறு உணவுகளையும் சாப்பிடுவதற்கு அனுமதிக்கிறது. எவ்வித அசவுகர்யங்களும் இல்லாமல் உங்களால் எந்த உணவையும் உட்கொள்ள முடிகிறது.
நேர்மறை எண்ணம்
ஒரு ஆரோக்கியமான செரிமான மண்டலம் உங்கள் மனநிலையை நேர்மறையாக பாதிக்கிறது. உங்களுக்கு செரிமானம் சிறப்பாக இருந்தால், அதனால் உங்களில் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் உற்பத்தி சிறப்பாக இருக்கும். குறிப்பாக செரோட்டினின் சுரப்பு நன்றாக இருக்கும். இது உங்கள் நன்மை செய்யும் ஹார்மோன்.
பசி கட்டுப்பாடு
உங்களின் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால், உங்களுக்கு சர்க்கரை சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது. இதனால் உங்களின் குடல் நுண்ணுயிர்களின் அளவு சமமாக இருக்கும். இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்தும். உங்களின் பசியைக் கட்டுப்படுத்தும்.
வாயில் கெட்ட நாற்றம்
உங்கள் குடல் நீங்கள் உட்கொள்ளும் உணவை முறையாக செரிக்கவில்லையென்றால், அது உங்களுக்கு கெட்ட நாற்றத்தை உருவாக்கும். ஒரு சிறப்பான செரிமான மண்டலம், உங்களை இதமாக வைத்திருக்கும். இது உங்கள் உடலில் கழிவுகள் ஏற்படாமல் தடுக்கும். இதனால் உங்கள் வாயில் இருந்து கெட்ட நாற்றம் ஏற்படாமல் இருக்கும்.
உணவு வகைகள்
ஒரு ஆரோக்கியமான செரிமான மண்டலம், பல்வேறு வகை உணவுகளையும் நீங்கள் உட்கொள்ள வழிவகுக்கும். இது அலர்ஜி, உணவை ஏற்காமை அல்லது வேறு உபாதைகளை ஏற்படுத்தாமல் காக்கும். பால், குளூட்டன் அல்லது அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் என உங்கள் செரிமான மண்டலம் எதை சாப்பிட்டாலும் செரித்துகொடுக்கும். எனவே நீங்கள் பல்வேறு வித்யாசமான உணவுகளை ருசிக்கலாம்.
வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம்
உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் 70 சதவீதம் உங்கள் குடலில்தான் உள்ளது. ஆரோக்கியமான செரிமான மண்டலம் உங்களின் இயற்கை எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
டாபிக்ஸ்