சொல்லப் போனால் நானும் ஒரு வகையில் அனாதை தான்.. தன் வாழ்க்கை குறித்து மனம் உருகிய ஷாருக்கான்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சொல்லப் போனால் நானும் ஒரு வகையில் அனாதை தான்.. தன் வாழ்க்கை குறித்து மனம் உருகிய ஷாருக்கான்..

சொல்லப் போனால் நானும் ஒரு வகையில் அனாதை தான்.. தன் வாழ்க்கை குறித்து மனம் உருகிய ஷாருக்கான்..

Malavica Natarajan HT Tamil
Dec 07, 2024 02:34 PM IST

சொல்லப் போனால் சினிமாத் துறையில் நான் ஒரு பாதி ஆதரவற்றவனாகத் தான் இருக்கிறேன். அதுமட்டுமின்றி, இந்தத் துறைக்கு சம்மந்தம் இல்லாதவனாக இருந்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

சொல்லப் போனால் நானும் ஒரு வகையில் அனாதை தான்.. தன் வாழ்க்கை குறித்து மனம் உருகிய ஷாருக்கான்..
சொல்லப் போனால் நானும் ஒரு வகையில் அனாதை தான்.. தன் வாழ்க்கை குறித்து மனம் உருகிய ஷாருக்கான்..

தமிழில் வெளியாகும் படத்திற்கு, அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், ரோபோ சங்கர், சிங்கம் புலி, நாசர், விடிவி கணேஷ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். அதேபோல், ஹிந்தியில் வெளியாகும் படத்திற்கு ஷாருக்கான் அவரது இரு மகன்களான ஆர்யன் கான் மற்றும் ஆப்ரம் கானுடன் இணைந்து டப்பிங் பேசியுள்ளார்.

முஃபாசாவுடன் ஆழமான உணர்வு

டப்பிங் பணிகளை முடித்த ஷாருக்கான், முஃபாசா படத்துடனான தனது தொடர்பை மிக உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் பேசிய வார்த்தைகளை டிஸ்னி நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், நடிகர் ஷாருக்கான் தன்னை ஒரு 'பாதி ஆதரவற்றவன் (அனாதை)' என்று குறப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி, தன்னை சினிமாவிற்கு நெருக்கமில்லாத வெளிநாட்டவர் என்றும் கூறியுள்ளார்.

நான் ஒரு பாதி அனாதை

முஃபாசா படத்தின் கதையை தன்னுடைய வாழ்வில் இணைத்து பேசிய ஷாருக்கான். நான் சினிமா உலகில், தாழ்மையாக இல்லாவிட்டால், எனது கதையும் இதுதான் என்று சொல்லலாம். தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், பெற்றோர் இல்லாத எவரும் ஆதரவற்றவர் தான். நான் இளமையிலேயே என் பெற்றோரை கிட்டத்தட்ட இழந்துவிட்டேன். இதனால் நான் ஒரு பாதி ஆதரவற்றவன்.

நான் வெளியூர்காரன்

முஃபாசா பேசுவது ஒரு வெளிநாட்டவரின் கதை. இந்தக் கதையைப் போல சினிமாத் துறையில் நானும் இருக்கிறேன். நான் சினிமாத் துறையில் காலடி எடுத்து வைத்த போது, எனது எந்த குடும்பமும் திரைப்படத் தயாரிப்பில் இல்லை. நான் டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்தேன். அதனால் நானும் சினிமாவில் வெளியூர்க்காரனாகத் தான் பார்க்கப்பட்டேன்.

பின், இது ராஜாவின் கதை. ஆம், இப்போது சினிமாவில் நான் ஒரு அரசன்" என்றான்.

முஃபாசா

முஃபாசா படம் தியாகம், நட்பு மற்றும் விசுவாசம் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான கதை என்று நான் நினைக்கிறேன். நான் டப்பிங் பேசும் போது நிறைய உணர்ச்சிகள் இந்தப் படத்துடன் எனக்கு ஏற்பட்டது. நான் முஃபாசாவிற்கு டப்பிங் கொடுக்க முயன்றபோது, என்னை நானே அட என்ன ஒரு நல்ல மனிதர், என்ன ஒரு சிறந்த கதாப்பாத்திரம். என்ன ஒரு நல்ல சிங்கம் என நினைத்துக் கொண்டேன் என்றார்.

முஃபாசா ஒரு நம்பமுடியாத பாரம்பரியத்தைக் கொண்டுள்ளார். அவர் காட்டின் இறுதி ராஜாவாக நிற்கிறார். தனது ஞானத்தை தனது மகன் சிம்பாவுக்கு வழங்குகிறார். ஒரு தந்தையாக நான் அவருடன் ஆழமாக தொடர்பு பட்டுள்ளேன் என்றார்.

கான் குடும்பத்தின் குரல்கள்

இந்தி பதிப்பில் முஃபாசா படத்திற்கு ஷாருக்கான் முஃபாாசாவிற்கு குரல் கொடுத்தார். அவரது மகன் ஆர்யன் கான் சிம்பாவுக்கு குரல் கொடுத்துள்ளார், இளம் முஃபாசாவின் குரலாக ஆப்ராம் கான் பேசியுள்லார். மேலும், பும்பாவாக சஞ்சய் மிஸ்ரா, திமோனாக ஸ்ரேயாஸ் தல்படே மற்றும் டாகாவாக மீயாங் சாங் ஆகியோர் இந்தப் படத்திற்காக டப்பிங் பேசி உள்ளனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.