Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை டிச.10 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
ஜாதகம் நாளை: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. டிசம்பர் 10ம் தேதி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும், எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 10 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் நேர்மறை மனப்பான்மை உடன் செயல்பட வேண்டிய நாள். சிரமங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். எதிர்கால செலவுகளை திட்டமிடுவீர்கள். புதிய முதலீடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளலாம். வாழ்கை துணையுடன் ஆனந்தமாக இருப்பீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் காதல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கூடும். எந்த பெரிய வியாதியும் உங்களைத் தொந்தரவு செய்யாது. காதல் உறவுகளில் சிக்கல்கள் வரலாம். கனிவாக பேசி காரியங்களை சாதிக்க வேண்டிய நாள். பேச்சில் நிதானமும், பொறுமையும் அவசியம்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முக்கியம். குடும்பம் மற்றும் அலுவலகத்தில் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். மாற்றத்தை ஏற்றுக் கொண்டால் சிறந்த முடிவுகள் கிடைக்கும். காதல் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஆற்றல் உடன் செயல்பட்டு நன்மைகள் அடையும் நாள். தொழிலில் முன்னேற்றமும், வாய்ப்புகளும் கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். முதலீடுகளை சார்ந்து புத்திசாலிதனமான முடிவுகளை எடுப்பீர்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.