‘3 வகுப்பில் விவாகரத்து வேதனை.. வாதநோயில் படுத்த படுக்கை; ஆடியோ லீக் விஷயத்தில் தற்கொலை முடிவு!’ - அன்ஷிதா கண்ணீர்
என்னுடைய அம்மா எங்களை காப்பாற்றுவதற்கு அங்கு சென்று விட்டார். நான் அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இதற்கிடையே எனக்கு தளர்வாதம் வந்து, உடலின் ஒரு பக்கம் செயலிழந்து விட்டது. அம்மா இல்லாத காரணத்தால், என்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டில்தான் நான் இருந்தேன். - அன்ஷிதா
(1 / 7)
‘3 வகுப்பில் விவாகரத்து வேதனை.. வாதநோயில் படுத்த படுக்கை; ஆடியோ லீக் விஷயத்தில் தற்கொலை முடிவு!’ - அன்ஷிதா கண்ணீர்
(2 / 7)
‘செல்லம்மா’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை அன்ஷிதா, சக நடிகர் அர்னவ் உடன் இணைத்துப்பேசப்பட்டார். இது அவரது மனைவியான திவ்யாவிற்கும், அவருக்கும் இடையே சலசலப்பை உருவாக்கியது. இந்த சலசலப்பிற்கிடையில், அன்ஷிதா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆனது. அந்த ஆடியோ சமூகவலைதளங்களில் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. இது அவரது பர்சனல் வாழ்க்கையையும் வெகுவாக பாதித்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம், அர்னவும், அன்ஷிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசனில் களமிறங்கினர். இதில் அர்னவ் வெளியேற்றப்பட்ட நிலையில், அன்ஷிதா முடிந்த அளவு தாக்குப்பிடித்து சென்று கொண்டு இருக்கிறார். இந்த நிலையில், அன்ஷிதா நேற்று நடந்த கதை சொல்லல் டாஸ்க்கில், தன்னுடைய வாழ்க்கை கதையை பகிர்ந்து இருக்கிறார். அதில், அர்னவ் விஷயத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் பேசி இருக்கிறார்.
(3 / 7)
அவர் பேசும் போது, “என்னுடைய அப்பா, அம்மா நான் சிறுவயதாக இருக்கும் போதே விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்து நடக்கும் சமயத்தில், என்னுடைய அம்மாவிற்கு வயது 20 தான்.அந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், என்னுடைய உறவினர் ஒருவர் என்னுடைய அம்மாவிற்கு துபாயில் வேலை வாங்கி கொடுத்தார். இதனையடுத்து என்னுடைய அம்மா எங்களை காப்பாற்றுவதற்கு அங்கு சென்று விட்டார். நான் அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.இதற்கிடையே எனக்கு தளர்வாதம் வந்து, உடலின் ஒரு பக்கம் செயலிழந்து விட்டது. அம்மா இல்லாத காரணத்தால், என்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டில்தான் நான் இருந்தேன். அவருக்கும் வயது அதிகம். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள், படுத்த படுக்கையாகவே சென்றது.
(4 / 7)
நான் படுத்த படுக்கையாக கிடந்த போது, அங்கே வந்த என்னுடைய அப்பா, தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் விரைவில் அதை கொடுக்கும் பட்சத்தில்தான், தன்னால் மறு கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று சண்டையிட்டார். அதை என்னால் மறக்கவே முடியாது. அதன் பின்னர் எனக்கு உடல்நிலை சரியானது. இங்கிருக்கும் அனைவரும் நான் செய்த சம்மந்தி உணவை வைத்து, சம்பந்தி சம்பந்தி என்று கிண்டல் செய்கிறீர்கள். ஆனால் அந்தச் சம்பந்திக்கு என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய இடம் இருக்கிறது. நான் சிறுவயதில் அதிகம் சாப்பிட்ட உணவு அதுதான்.
(5 / 7)
அவர் பேசும் போது, “என்னுடைய அப்பா, அம்மா நான் சிறுவயதாக இருக்கும் போதே விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்து நடக்கும் சமயத்தில், என்னுடைய அம்மாவிற்கு வயது 20 தான்.அந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், என்னுடைய உறவினர் ஒருவர் என்னுடைய அம்மாவிற்கு துபாயில் வேலை வாங்கி கொடுத்தார்.
(6 / 7)
ஆனால், வேறு வழியில்லாமல், நான் நடிக்க ஆரம்பித்தேன்; குட்டி குட்டி கேரக்டர்களில் நடித்து, தற்போது இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன். என்னை பெரும்பாலான சமயங்களில் திமிர் பிடித்த பெண் என்றுதான் எல்லோரும் அழைத்து இருக்கிறார்கள். ஏனென்றால் எல்லா இடத்திலும் நான் என் குடும்பத்திற்காக, எனக்காக பேசியிருக்கிறேன். என் குடும்பத்திற்காக என்னுடைய அப்பா இருந்து என்ன செய்வாரோ, அதை நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மோசமான சம்பவம் நடந்தது. ஆம், அந்த ஆடியோ லீக் விஷயத்தில், என்னுடைய வாழ்க்கை கதையை யார் யாரோ, அவர்கள் இஷ்டப்படி சோசியல் மீடியாவில் எழுத ஆரம்பித்து விட்டார்கள். அதில் நான் மிகவும் உடைந்து போய் விட்டேன்.
(7 / 7)
நான் படுத்த படுக்கையாக கிடந்த போது, அங்கே வந்த என்னுடைய அப்பா, தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் விரைவில் அதை கொடுக்கும் பட்சத்தில்தான், தன்னால் மறு கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று சண்டையிட்டார். அதை என்னால் மறக்கவே முடியாது. அதன் பின்னர் எனக்கு உடல்நிலை சரியானது. இங்கிருக்கும் அனைவரும் நான் செய்த சம்மந்தி உணவை வைத்து, சம்பந்தி சம்பந்தி என்று கிண்டல் செய்கிறீர்கள். ஆனால் அந்தச் சம்பந்திக்கு என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய இடம் இருக்கிறது. நான் சிறுவயதில் அதிகம் சாப்பிட்ட உணவு அதுதான்.
மற்ற கேலரிக்கள்