எப்போதும் ஸ்டிரிக்ட்டான பெற்றோரா? அதனால் வரும் ஆபத்துக்களை பாருங்க! கொஞ்சம் கூலாகவும் நடந்துக்கங்க!
Dec 06, 2024, 01:55 PM IST
பெற்றோர் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?
நீங்கள் மிக கடுமையான பெற்றோரா? அது குழற்தைகயின் நடவடிக்கைகளில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. 2015ம் ஆண்டு ராயல் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் 60 சதவீதம் பேர் கடுமையான பெற்றோர்களால பாதிக்கப்பட்டிருந்தார் என ஆய்வுகள் கூறியது. அதிகாரத்தை குழந்தைகள் மீது அதிகம் உபயோகிக்கும் பெற்றோர்களால், பிரச்னைகள்தான் அதிகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் குழந்தைகள் கூறுவதை காதுகொடுத்து கேட்பதேயில்லை. இதனால் குழந்தைகள் எண்ணற்ற வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
குழந்தைகளிடம் அதிகம் எதிர்பார்ப்பது மற்றும் அவர்களை குறைவாக கவனிப்பது இதுவே கடுமையான பேரன்டிங் முறை. இது குழந்தைகளின் நலன் மற்றும் வளர்ச்சியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். அது கடுமையாகவும், நீண்ட நாட்களுக்கும் இருக்கும். கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் ஒரு நல்ல பெற்றோருக்கு கட்டாயம் தேவை.
ஆனால் அதுவே அதிகப்படியாகும் போது அது குழந்தைகளின் சமூக, மனநல, உணர்வு மற்றும் மன நலன்களை பாதிக்கிறது. குழந்தைகளின் தன்னம்பிக்கையை கட்டுக்கோப்பான பேரன்டிங் குறைக்கிறது. அதில் குழந்தைகளுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கிறது. சுதந்திரத்தை தடுக்கிறது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
அவர்களை எந்த முன்னெடுப்பும் எடுக்க விடாமல் தடுக்கிறது. அவர்களின் முழுதிறனையும் அவர்கள் அறிந்துகொள்ள முடியாமல் செய்கிறது. அது அவர்களை ஒரே மாதிரியின வாழ்க்கை முறைக்குள் தள்ளுகிறது.
இந்த பேரன்டிங்கில் வாழும் குழந்தைகள் எப்போதும் ஒரு நெருக்கடி மனநிலையிலேயே இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு பயம், பதற்றம் மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு தவறு செய்யக்கூடிய மனநிலை ஏற்படுகிறது.
கடுமையான பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கு சமூக திறன்கள் என்பது துளியும் இருப்பதில்லை. இவர் வேறு விதமாக வளர்ந்து பின்னர் சமூகத்தில் நல்ல இடங்களில் வரும்போது, அவர்கள் தவறான வழிகளை பின்பற்றுகிறார்கள்.
கடுமையான பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் பெற்றோராகும்போது அவர்களும் கடுமையான பெற்றோராகவே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு தலைமுறையாகவே இது பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. கடுமையான பெற்றோர்கள் பல்வேறு மனநல பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறார்கள். இது உடல் நலனையும் பாதிக்கிறது.
கடுமையாக நடக்கும் பெற்றோர்களால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
தன்னம்பிக்கை குறைவு
கடுமையான பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் எப்போதும் அவர்களின் நடவடிக்கைகள் தவறு என்ற கண்ணோட்டத்திலே வளர்க்கிறார்கள். இதனால் அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள்.
அடுத்தவர்களிடம் கருத்து கேட்பது
கடுமையான பெற்றோரிடம் வளரும் குழந்தைகள், எப்போதும் தாங்கள் செய்யும் செயல்கள் குறித்து அடுத்தவர்களிடம் கருத்து கேட்பார்கள். அது அவர்களுக்கு வீட்டில் ஒரு நேர்மறையான சூழல் இல்லாத காரணத்தால் ஏற்படுகிறது.
குறைவான அனுதாபம்
கடுமையான பெற்றோரின் கண்டிப்பான குணங்கள், குழந்தைகளுக்கு இயற்கையிலேயே அனுதாபத்தை ஏற்படுத்துவதில்லை. அது விதிகளையும், விளைவுகளை மட்டுமே அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. புரிதலை அல்ல.
உறவில் ஏற்படும் சிக்கல்
எப்போதும் கடுமையான சூழலில் வளரும் பிள்ளைகள், தங்களின் பெற்றோர்களை தவிர்க்கிறார்கள். பெற்றோரிடம் இருந்து உணர்வு ரீதியாக விலகியிருப்பார்கள். எனவே திறந்த உரையாடல் வேண்டும்.
மனஅழுத்தம் மற்றும் பயம்
கடுமையான பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் கடுமையான மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு பெரிய பிரச்னைகள் ஏற்படுகிறது.
இரட்டை மனநிலை
கடுமையான பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் இரட்டை மனநிலையில் வளர்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஒரு மாதிரியும், வெளியில் ஒரு மாதிரியும் வளர்கிறார்கள். எனவே பெற்றோரே கவனம் தேவை. நீங்கள் கடுமையாக நடந்துகொள்வதற்கு முன்னர் சிந்தித்து செயல்படுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்