‘கொஞ்சம் சிரிங்க பாஸ்’ சிரிக்க சில ஜோக்குகளும், சிந்தனைக்கு சில வரிகளும்; ஸ்மைல் ப்ளீஸ்!
Dec 05, 2024, 03:35 PM IST
சிரித்து மகிழ சில ஜோக்குகள் இங்கு பகிரப்பட்டுள்ளது.
ஜோக்குகள் என்றால் என்ன? ஜோக்குகள், நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையில் எழுதி மக்களை சிரிக்கவைப்பது ஆகும். ஆனால் அதுபோல் எழுதும்போது அது யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஜோக்குகள் கதைபோல் இருக்கலாம் அல்லது உரையாடல்களாக இருக்கலாம். முடிக்கும்போது பஞ்ச் லைன் சேர்க்கலாம். அதில் சிரிக்கக்கூடிய அம்சம் இருக்கவேண்டும். சிறிய ஜோக்குகளாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, படிக்கும்போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ உங்களுக்கு சிரிப்பு வரவேண்டும் அதுதான் ஜோக்குகள் எனப்படும். ஜோக் விடுகதைகளும் உள்ளன. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டுகும்போது அவர்களின் சிந்தனைத்திறன் வளரும். ஜோக்குளின் நவீன வடிவம்தான் மீம்ஸ்கள். ஜோக்குகளை நீங்கள் கூறும்போது மற்றவர் கட்டாயம் சிரிக்கவேண்டும். ஆனால் அவர்கள் மனம் புண்படக்கூடாது.
சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்
சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கும் வகையிலும் நகைச்சுவை காட்சிகளை அமைப்பார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.
எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம். இன்று சிந்தனைக்கு அல்ல; வாய் விட்டு சிரிச்சுட்டு மட்டும் போங்க. இதோ மொக்க ஜோக்குகள்.
உங்களை கலகலவென சிரிக்க வைக்கும் மொக்க ஜோக்குகள் இதோ!
யாராலும் அனைக்க முடியாத நெருப்பு எது?
ஃப்ரி ஃபையர்
தமிழ் புத்தாண்டுக்கும், ஆங்கிலப் புத்தாண்டுக்கும் என்ன வித்யாசம்?
4 மாதம்தான் வித்யாசம்
இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் நாடுகளுக்கும் நடுவில் என்ன இருக்கு?
இரண்டுக்கும் நடுவில் கமாதான் இருக்கு
ஒருவர் தட்டு, கரண்டி எல்லாத்தையும் தூக்கி வீசிக்கொண்டே இருப்பாராம்? ஏன் தெரியுமா?
ஏன்னா, அவருக்கு ‘வீசிங்’ ப்ராப்ளம் இருக்காம்
கண்ணீருக்கும் தண்ணீருக்கும் என்ன வித்யாசம்?
ஒரே ஒரு ஏழுத்துதாங்க வித்யாசம்.
டென்சன் அதிகமானால் என்னவாகும்?
ரொம்ப யோசிக்காதீங்க
11 சன் ஆகும்.
ஒரு கோழி காலேல கத்தினா என்ன அர்த்தம்?
அந்தக்கோழி எழுந்திருச்சுருச்சுன்னு அர்த்தம்.
ஒரு பறவை நாம் சொல்லும் பேச்சை கேட்வே கேட்காது?
கிளிதான், நம்ம கிளி கிளின்னு சொன்னாலும், அது இதுவரைக்கும் ஒன்ன கூட கிளிச்சதில்லை.
ஒரு காடு வந்தா மட்டும் ஃபேன் கேட்குமாம்?
வேக்காடுதான் அது.
கொடுக்க முடியாத வரி எது?
ஜனவரி, பிப்ரவரி
குடிக்க முடியாத டீ எது?
கரண்‘டீ’ங்க
மனம் விட்டு சிரித்தீர்களா? இன்றைய மோட்டீவேசன் லைன்ஸ்,
ஒவ்வொருவருக்கும் தனிக்கதை உள்ளது. அதுகுறித்து அறியாமல் எவரையும் விமர்சிக்காதீர்கள். ஏனெனில் உண்மைக்கதை உங்களை வியக்க வைக்கலாம்.