முளைக்க வைத்த பாசிப்பயறு சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் 9 நன்மைகள்! ஓ இதுக்குத்தான் சாப்பிடவேண்டுமா?
Dec 16, 2024, 06:00 AM IST
முளைக்க வைத்த பாசிப்பயறில் உள்ள நன்மைகள் என்ன?
ஊறவைத்து, முளைக்கவைத்த பாசிப்பயறு சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பாருங்கள். தினமும் ஒரு கைப்பிடியளவு ஊறவைத்த பாசிப்பயிறு சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இதில் உங்கள் காலை உணவுக்கு தேவையான அனைத்து ஆற்றலும் கிடைக்கும். எனவே காலையிலே நீங்கள் இதை சாப்பிடுவது நல்லது. இதில் உங்கள் உடலுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்களுக்கு செரிமானத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. முளைக்க வைத்த பாசிப்பயிறு சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பாருங்கள்.
புரதச்சத்துக்கள் நிறைந்தது
பாசிப்பயிறில் அதிகளவில் புரதச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது உங்கள் தசைகளை சரிசெய்கிறது. எனவே உங்களின் சரிவிகித உணவில் நீங்கள் ஊறவைத்து, முளைக்க வைத்த பாசிப்பயறுகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உற்சாகத்தை தருகிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
முளைக்க வைத்த பாசிப்பயறில் உள்ள என்சைம்கள், உங்களின் செரிமானத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் உடல் சிறப்பாக ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இது உங்களுக்கு மலச்சிக்கலைப் போக்குகிறது. இது உங்களின் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
முளைக்க வைத்த பாசிப்பயறில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு ஊட்டமளிக்கிறது. இது உங்கள் உடல் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் மேம்படுகிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
முளைக்கவைத்த பாசிப்பயிறில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலில் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் பளபளப்பாகவும், இளமையுடனும் தோற்றமளிக்கிறது.
கலோரிகள் குறைவு
முளைக்கவைத்த பாசிப்பயறில் கலோரிகள் குறைவு, இதனால் உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்கள் உங்கள் அன்றாட உணவில் முளைக்க வைத்த பாசிப்பயறை சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் உடல் எடையைக் குறைக்கவும், உங்கள் உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கவும் உதவுகிறது. இது உங்கள் பசியைக்கட்டுபடுத்தி, உங்களுக்கு சாப்பிட்ட உணர்வைத் தருகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
முளைக்கவைத்த பாசிப்பயறில், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது உங்கள் உடல் நலனுக்கு மிகவும் சிறந்தது.
ரத்த சர்க்கரை அளவை முறையாகப் பராமரிக்கிறது
முளைக்க வைத்த பாசிப்பயறு லோ கிளைசமிக் உணவுப்பட்டியலில் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. இது உங்களுக்கு சிறப்பான ஒரு உணவாகும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வு ஆகும். உங்கள் உடலில் குளுக்கோஸ் அளவை சமமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் சிறந்தது.
உடலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது
முளைக்க வைத்த பாசிப்பயறில் உங்கள் உடலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் நலனை அதிகரிக்கிறது.
உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது
இதில் அதிகளவில் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இதனால் உங்களுக்கு நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கிறது. இது உங்களுக்கு ஏற்படும் சோர்வைப்போக்க உதவுகிறது.
டாபிக்ஸ்