Christmas: 'அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்' - ஈபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Christmas: 'அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்' - ஈபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

Christmas: 'அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்' - ஈபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

Marimuthu M HT Tamil
Dec 24, 2023 10:03 AM IST

எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார்.

'அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்' - ஈபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து
'அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்' - ஈபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தியில், ‘’ கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் எனதருமை கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

'உன் மீது நீ அன்பு செலுத்துவது போல, அடுத்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்' என்று எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த தினத்தை, கிறிஸ்தவப் பெருமக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் நட்சத்திரங்களைக் கட்டி வீட்டினை அழகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டு, விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு கொண்டாடி மகிழ்வார்கள். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் கிறிஸ்தவப் பெருமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் திகழும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

'நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்' என்ற இயசுேபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.