தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஜார்கண்டின் பூரி – துஸ்கா; ஆலு – சன்னா மசலாலவுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்!

ஜார்கண்டின் பூரி – துஸ்கா; ஆலு – சன்னா மசலாலவுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil

Dec 15, 2024, 03:36 PM IST

google News
துஸ்கா, ஆலு - சன்னா மசாலா செய்வது எப்படி?
துஸ்கா, ஆலு - சன்னா மசாலா செய்வது எப்படி?

துஸ்கா, ஆலு - சன்னா மசாலா செய்வது எப்படி?

துஸ்கா, ஜார்க்கண்ட் முழுவதும் சாப்பிடப்படும் உணவாகும். இது ஜார்க்கண்ட் மாநில உணவாகும். இதில் அரிசி, உளுந்து, கடலை பருப்பு ஆகிய மூன்று பருப்புகளும் பயன்படுத்தப்பட்டு செய்யப்படும் உணவாகும். இதை எண்ணெயில் பொரித்து எடுக்கவேண்டும். இதை சட்னி அல்லது மசாலாக்களுடன் பரிமாறலாம். இது ஸ்னாக்ஸ் அல்லது காலை உணவாக பரிமாறப்படுகிறது. இது சிறிய கடைகளில் அதிகளவில் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

மாவு தயாரிக்க

பச்சரிசி – ஒரு கப்

கடலை பருப்பு – அரை கப்

உளுந்து – கால் கப்

(இது மூன்றையும் 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும். உப்பு சேர்த்து கரைத்து 4 மணி நேரம் வரை புளிக்கவைத்துக்கொள்ளவேண்டும்)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மல்லித் தூள் – அரை ஸ்பூன்

சாட் மசாலா – அரை ஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

இஞ்சி – பச்சை மிளகாய் விழுது – ஒரு ஸ்பூன்

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

சீரகம் – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

தயாரித்து புளிக்க வைத்துள்ள மாவில் மஞ்சள் தூள், மல்லித்தூள், சாட் மசாலா, பெருங்காயத்தூள், இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, மல்லித்தழை, சீரகம் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் தாராமான எண்ணெய் சேர்த்து ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஊற்றினால் பூரிபோல் உப்பி வரும். எடுத்து எண்ணெயை வடித்துவிட்டு சாப்பிட சுவை அள்ளும்.

இதற்கு தொட்டுக்கொள்ள ஆலு – சன்னா மசாலா சுவையானதாக இருக்கும். அதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான அளவு

கொண்டைக்கடலை – ஒரு கப்

(8 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

உருளைக்கிழங்கு – 4

(இரண்டையும் குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

தக்காளி – 1 (அரைத்தது அல்லது துருவியது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலாத் தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

பிரியாணி இலை – 1

ஸ்டார் சோம்பு – 1

ஏலக்காய் – 1

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

தேங்காய்ப் பால் – ஒரு கப்

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.

வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து தக்காளியை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும். இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

அடுத்து வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

தேங்காய்ப்பால் மற்றும் மிளகாய்த் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவேண்டும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவேண்டும்.

துஸ்காவுடன் இதை தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி