தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் யார் அடுத்த தொகுப்பாளர் - நெருக்கமானவர்களிடம் இருந்து கசிந்த தகவல்

Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் யார் அடுத்த தொகுப்பாளர் - நெருக்கமானவர்களிடம் இருந்து கசிந்த தகவல்

Marimuthu M HT Tamil

Aug 08, 2024, 05:14 PM IST

google News
Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் யார் அடுத்த தொகுப்பாளர் என நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.
Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் யார் அடுத்த தொகுப்பாளர் என நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.

Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் யார் அடுத்த தொகுப்பாளர் என நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.

Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகியதில் இருந்து, அவர் ஏன் விலகினார், அடுத்து அவ்விடத்தில் வரப்போகும் புதிய தொகுப்பாளர் யார் எனப் பல்வேறு கேள்விகள் எழும்பி வருகின்றன. இந்நிலையில் அதற்கு சில நம்பத்தகுந்த இடத்தில் இருந்து செய்தி வந்திருக்கிறது.

பிக்பாஸில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள்:

கமல்ஹாசன் பிக்பாஸில் இருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து சினிமா பத்திரிகையாளர் சுபையர், ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘கமல்ஹாசன் கொடுத்த அறிக்கையில், தனக்கு சினிமா சார்ந்த பணிகள் உள்ளது என்பதால்,விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடைசியாக என்னவென்று விசாரிக்கும்போது, கமல்ஹாசன் அமெரிக்கா போகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய ஒரு கோர்ஸை 70 வயதில் படிப்பதற்காக கமல்ஹாசன் செல்கிறார். இது கமல்ஹாசனையும் சினிமாவையும் நேசிக்கும் நபர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும். இந்த வயதில் கற்றுக்கொள்ள நினைக்கிறார் பாருங்கள். சினிமா மற்றும் டிவியில் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்களை அவர் தான் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் அறிமுகப்படுத்தினார்.

’மகாநதி’ திரைப்படத்தில் தான் முதன்முறையாக ஆவிட் எடிட்டிங்கினை செய்துகாட்டினார், கமல்ஹாசன். அதற்குமுன்பெல்லாம், ஃபிலிமில் படம் எடுத்து வந்து, மூவி அலையா என்னும் மிஷின் மாதிரி இருக்கும், நெகட்டிவ் பார்த்து கட் பண்ணுவாங்க.

அதை ஃபிலிமில் போடுவதை, கேஸட்டில் ரெக்கார்டு செய்து, அதை கணினியில் ஓடவைத்து, அதை மார்க் செய்து, அதன்பின், நெகட்டிவை கட்செய்துகாட்டினார், கமல்ஹாசன். ‘குருதிப்புனல்’ படத்தில் அவர் தான் ‘டால்பி’யை கொண்டு வருகிறார்.

’மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தில் முதன்முறையாக டிஜிட்டலில் படம் எடுத்து, தமிழ் சினிமாவுக்கு முன்னோடியாக இருந்தார், கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யத்தை வழிநடத்துவது யார்?:

இதனைத்தொடர்ந்து தான், ‘ஏ.ஐ’ என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள 6 மாத கோர்ஸில் படிக்க அமெரிக்கா செல்கிறார், கமல்ஹாசன்.

'தக் லைஃப்’ திரைப்படம் இன்னும் 15 நாட்களில் முடிந்துவிடும். படத்தின் முதல் பாதிக்கான டப்பிங் முடிந்துவிட்டது. இந்நிலையில் இந்தப் படத்தை முடித்துவிட்டு தான், கமல்ஹாசன் அமெரிக்கா புறப்படுகிறார்.

அடுத்த வருடம் பிப்ரவரி வரை அங்கு தான், கமல்ஹாசன் இருப்பார். அது தவிர, அங்கு கமல்ஹாசன் ‘KH என்னும் காதி’ ஷோரூம் அமெரிக்காவில் வைச்சிருக்கார். வருஷத்தில் மூன்று மாதங்கள், கமல்ஹாசன் அமெரிக்காவில் தான் இருப்பார். இதனால் தான், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுக்கவில்லை.

ஆனால், அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்து, பிக்பாஸில் பங்கேற்று இருக்கக் கூடாது. இதை அவரது ரசிகர்களும் விரும்பிக்கொண்டு இருந்தனர்.

பிக்பாஸ் சீசன் 8-ஐ வழிநடத்தப்போகும் பிரபலம் இவரா?:

ஆனால், தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு கமல்ஹாசன் தான் காரணம். அவர் இல்லையென்றால், பிக்பாஸ் நிகழ்ச்சி இல்லை என்னும் அளவுக்கு வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார், கமல்ஹாசன்.

பிக்பாஸின் இந்த சீசனில் இருந்து விலக, கமல்ஹாசனுக்கு சம்பளம் எல்லாம் பிரச்னை கிடையாது. பணம் வேண்டும் என்ற ஆசை எல்லாம் அவருக்கு கிடையாது.

எதுவாக இருந்தாலும் அதை கோர்ஸ் எடுத்து படிக்க, கமல்ஹாசனிடம் இருக்கும் சினிமா மீதான காதல் தான் காரணம். எந்தவொரு விஷயத்தையும் முழுவதுமாக சரிவர கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான், கமல்ஹாசனின் எண்ணம்.

கமல்ஹாசனைப் பொறுத்தவரை, அவர் சென்றாலும், அவரது கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சியை வழிநடத்துவார்கள். கமல்ஹாசன் பிக்பாஸில் இருந்துவிலகினாலும், அவரது இடம் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. அதை நிரப்பமுடியாது. ஓரளவுக்கு சரிசெய்யலாம்.

எனவே, பிக்பாஸின் வரும் கால ஷோக்களை சிம்பு செய்வது என ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் அது தான் உண்மை. இன்னும் சில நாட்களில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகிவிடும். சிம்புவும் சினிமாவில் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றக்கூடிய நபர் தான்’’ என்றார்.

நன்றி: ஆகாயம் தமிழ்

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை