TheGoatSecondSingle: தி கோட் படத்துக்காக தனது அக்கா பவதாரிணியின் குரலை ஏ.ஐ. நுட்பத்தில் மீட்டுகொண்டுவந்த யுவன் சங்கர்
TheGoatSecondSingle: தனது அக்கா பவதாரிணியின் குரலை ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி யுவன் சங்கர் ராஜா, தி கோட் படத்தில் ஒரு பாடலை கம்போஸிங் செய்துள்ளார்.

TheGoatSecondSingle: நடிகர் விஜய்யின் 50ஆவது பிறந்த நாளையொட்டி, தி கோட் படத்தின் இரண்டாம் பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ எனும் பாடல் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலை ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் தனது சகோதரி பவதாரிணியின் மீள் உருவாக்கம் செய்து பயன்படுத்தியுள்ளார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
தி கோட் திரைப்படத்தில் நடிப்பவர்கள் விவரம்:
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார்.
தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.