Top 10 News: புது சீரியல் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல் வரை .. மாலை டாப் 10 செய்திகள்-evening top 10 news on august 06 2024 indicates kamal hassan quits from bigg boss - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 News: புது சீரியல் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல் வரை .. மாலை டாப் 10 செய்திகள்

Top 10 News: புது சீரியல் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல் வரை .. மாலை டாப் 10 செய்திகள்

Aarthi Balaji HT Tamil
Aug 06, 2024 07:03 PM IST

Top 10 News: புது சீரியல் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல் ஹாசன் விலகும் வரை நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

புது சீரியல் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல் வரை .. மாலை டாப் 10 செய்திகள்
புது சீரியல் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல் வரை .. மாலை டாப் 10 செய்திகள்

சாதனை படைக்கும் ஸ்பார்க்

நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் படத்தில் இருந்து வெளியான, ஸ்பார்க் பாடல் யூ-டியூப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது.

ஆவேஷம் தெலுங்கு மொழியில் ரீமேக்?

ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம். தற்பொழுது இந்த படத்தை தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழியில் சூப்பர் ஸ்டாரான பாலய்யா , ரங்கன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.

Poda Po பாடல்

ஜமா படத்தில் இடம் பெற்று உள்ள, ' Poda Po' பாடல் இன்று ( ஆகஸ்ட் 6) வெளியானது.

வெங்கட் பிரபுவை பாராட்டிய விஜய்

'தி கோட்' படத்தை பார்த்த நடிகர் விஜய், வெங்கட் பிரபுவை கட்டியணைத்து “கலக்கிட்ட.. அவசரப்பட்டு ரிட்டையர்மெண்ட் அறிவிச்சுட்டேன்.. இன்னொரு படம் உன் கூட பண்ணிருக்கலாம்” என கூறியதாக சினிமா ஆர்வலர் அபிஷேக் ராஜா கூறினார்.

காதலருடன் கிருத்தி சனோன்

கிருத்தி சனோன் தனது தனது 33வது பிறந்தநாளை தனது காதலர் கபீர் பாஹியாவுடன் கொண்டாடினார்.

அதிக முறை ரீமேக் செய்யப்பட்ட படம்

இந்தியாவில் அதிக முறை ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை தெலுங்கு படமான நுவுவொஸ்தானே நெனொண்டந்தனா பெற்றுள்ளது. இந்தப் படம் 9 முறை ரீமேக் செய்யப்பட்டது.

கார்த்திகை தீபம் சீரியல்

சன் டிவியின் எதிர்நீசசல் தொடரில் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய விமல், கார்த்திகை தீபம் சீரியல் மூலம் எண்டரி கொடுக்க போகிறார்.

ராயன் வசூல்

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் படம் தமிழ் நாட்டில் மட்டுமே ரூ. 66 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

திவ்யா கணேஷ் விலகல்

மகாநதி தொடரில் இருந்து திவ்யா கணேஷ் விலகுவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் விலகினார்.

AK Vs SK

விடாமுயற்சி கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுவதால் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்பட ரிலீஸ் தள்ளிப்போவக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

புது சீரியல்

ஜீ தமிழில் விரைவில் ஒரு புதிய தொடர் வர இருக்கிறதாம். தொடர் வருவதற்கான புரொமோ விரைவில் வெளியாகும் என சேனல் புகைப்படம் வெளியீட்டு உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.